போதைப் பொருள் தடுப்புப் பிரிவு விசாரணை.. ஆஜரானார் தீபிகா படுகோனே.. பரபரப்பில் பாலிவுட்
மும்பை: போதைப் பொருள் விவகாரம் தொடர்பான விசாரணைக்காக என்சிபி அதிகாரிகள் முன்பு ஆஜரானார் தீபிகா படுகோனே.
நடிகை தீபிகா படுகோனேவின் வாட்ஸ்அப் தகவல்கள் மூலம் அவர் கண்காணிக்கப்பட்டு சம்மன் அனுப்பிய நிலையில், தற்போது ஆஜராகி உள்ளார்.
என்சிபி அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜரான தீபிகா படுகோனே புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

சுஷாந்த் சிங் மரண வழக்கு
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான விசாரணையில், பாலிவுட் நடிகர்கள் மத்தியில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ள தகவல் கிடைத்துள்ள நிலையில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவான நார்காடிக்ஸ் கண்ட்ரோல் பியூரியோ எனும் என்சிபி அதிகாரிகள் நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.

விளம்பர ஷூட்டிங்
கணவர் ரன்வீர் சிங் உடன் கோவாவில் விளம்பர ஷூட்டிங்கில் நடித்துக் கொண்டிருந்த நடிகை தீபிகா படுகோனேவுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவான என்சிபி சம்மன் அனுப்பிய நிலையில், கோவாவில் இருந்து நேற்று முன் தினம் இரவு மும்பை வந்தார் தீபிகா படுகோனே.

நேரில் ஆஜர்
போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக சிக்கிய வாட்ஸ்அப் சாட்களை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு தொடர்பு இருப்பதாக என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், அது தொடர்பாக தற்போது என்சிபி அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகி உள்ளார் நடிகை தீபிகா படுகோனே.

வாட்ஸ்அப் அட்மின்
பாலிவுட்டின் போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ்அப் குழுவுக்கு நடிகை தீபிகா படுகோனே தான் அட்மின் என்ற அதிர்ச்சியான தகவலை நேற்று என்சிபி அதிகாரிகள் வெளியிட்டனர். நடிகை தீபிகா படுகோனேவின் மேனேஜர் கரிஷ்மா பிரகாஷிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்ட நிலையில், தற்போது தீபிகாவிடம் எந்த மாதிரியான விசாரணை நடத்தப்படும் என்பது தெரியவில்லை.

அனுமதி இல்லை
என்சிபி அதிகாரிகள் நடத்தும் விசாரணையில் மனைவி தீபிகா படுகோனே உடன் தானும் கலந்து கொள்ள வேண்டும் என கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் முன்னதாக கோரிக்கை விடுத்து இருந்தார். ஆனால், அந்த கோரிக்கை மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தீபிகா தனியாக விசாரணைக்கு செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











