திடீர் சம்மன்.. போலீசாரிடம் வாட்ஸ் அப் உரையாடலை காண்பிப்பதா..? மானேஜரை விளாசிய தீபிகா படுகோன்!

By

சென்னை: போலீசாரிடம் வாட்ஸ் அப் உரையாடலை காண்பித்ததாக தனது மானேஜரை தீபிகா படுகோன் விளாசியதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து, தனது மகன் சாவுக்கு நடிகை ரியா சக்ரவர்த்திதான் காரணம் என்று கூறி, சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார்.

சி.பி.ஐ. விசாரணை

சி.பி.ஐ. விசாரணை

சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி மாற்றப்பட்டு இருப்பதாகவும் புகாரில் அவர் கூறி இருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து சி.பி.ஐ. போலீசாரும், பணமோசடி புகார் குறித்து அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தினர்.

வாட்ஸ் அப் உரையாடல்

வாட்ஸ் அப் உரையாடல்

இதில், பல திடுக் தகவல்கள் வெளியாயின. சுஷாந்த் சிங் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ் அப் உரையாடலை கண்ட போலீசாருக்கு, அவருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுஷாந்த் தற்கொலையை போதைப்பொருள் வழக்குடன் தொடர்புபடுத்தி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்க தொடங்கினர்.

ரியா சக்கரவர்த்தி

ரியா சக்கரவர்த்தி

விசாரணையில் ரியா போதைப் பொருள் பயன்படுத்தியதும், சுஷாந்த் சிங்குக்காக அவர் போதைப் பொருள் வாங்கியதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர் கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் தீபக் சவாந்த் உள்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாரா அலிகான்

சாரா அலிகான்

இந்நிலையில், இதையடுத்து ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பி உள்ளனர். தீபிகா படுகோனின் மானேஜர் கரிஷ்மா பிரகாஸுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர். உடல் நலப்பிரச்னை காரணமாக, அவர் ஆஜராவதாக வெள்ளிக்கிழமை வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

இந்நிலையில் கரிஷ்மா பிரகாஷும், டேலன்ட் மானேஜர் ஜெய சஹாவும்தான் தனது வாட்ஸப் உரையாடலை போலீசாருக்கு தெரிவித்துள்ளனர் என்று நடிகை தீபிகா படுகோன் அறிந்தார். அவர்களின் வாட்ஸ் அப் உரையாடலில் ‘டி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தீபிகா படுகோன் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களை தீபிகா விளாசியதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Prabhas உடன் நடிக்க Deepika கேட்ட சம்பளம்
கோவா ஷூட்டிங்

கோவா ஷூட்டிங்

இதையடுத்து சில வழக்கறிஞர்களுடன் அவர் வீடியோ காலில் நேற்று பேசியுள்ளார். தற்போது சாகுன் பத்ரா இயக்கும் இந்திப் படத்தின் ஷூட்டிங்கிற்காக கோவா சென்றுள்ளார் தீபிகா. இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் நடித்து வரும் அவர், இன்று மும்பை திரும்புகிறார் என்றும் நாளை அவர் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முன் ஆஜராவார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X