என்ன தீபிகா இது.. அந்த இடத்துலயும் லுங்கி டான்ஸா.. வைரலாகும் வீடியோ!
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ஜிம்மில் ஒர்க்கவுட் செய்யும் போது லுங்கி டான்ஸ் பாட்டுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
தீபிகா படுகோனே நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான சபாக் திரைப்படம் நல்ல வரவேற்பையும், விமர்சனத்தையும் பெற்றது.
சபாக் படத்தைத் தொடர்ந்து, தீபிகா படுகோனே அடுத்து எந்த படத்தில் நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஒர்க்கவுட்
பாலிவுட் நடிகைகள் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதை, தினசரி நடவடிக்கையாக கொண்டு வருகின்றனர். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் வாழ்க்கையை மையப்படுத்தி சமீபத்தில் சபாக் திரைப்படம் வெளியானது. தற்போது, தனது அடுத்த படத்துக்காக தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகிறார் தீபிகா.

லுங்கி டான்ஸ்
ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி டான்ஸ் பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. ஜிம்மில், ரோப் டிரெய்னிங் செய்து வரும் தீபிகா படுகோனே, அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கணவனுடன்
ராம் லீலா, ஃபைண்டிங் ஃபானி, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் கணவர் ரன்வீர் சிங்குடன் ஜோடி போட்டு நடித்துள்ள தீபிகா படுகோனே, ‘83' எனும் உலக கோப்பையை வென்ற கதையை மையப்படுத்தி உருவாகி வரும் கிரிக்கெட் படத்திலும் ரன்வீருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அடுத்து என்ன படம்
ரன்வீர் சிங்குடன் ‘83' படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ள தீபிகா படுகோனே, அடுத்த என்ன பெரிய படத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு, பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், ஹாலிவுட் படமான டிரிபிள் எக்ஸ் படத்தின் 4ம் பாகத்திலும் தீபிகா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மீண்டும் தமிழில்
செளந்தர்யா ரஜினிகாந்த் - கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியில் உருவான கோச்சடையான் அனிமேஷன் திரைப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக தீபிகா நடித்திருந்தார். ஆனால், அந்த படம் சரியாக உருவாகாததால், தீபிகாவின் கோலிவுட் என்ட்ரி சரியாக அமையவில்லை. மீண்டும் ஒரு தமிழ் படத்தில் தான் நடிப்பேன் என சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தீபிகா கூறியுள்ளார்.

பிரபாஸ் உடன்
தேசிய விருது வென்ற நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாக உள்ள பிரபாஸின் 21வது படத்தில் தீபிகா படுகோனே தான் ஜோடி என்கிற தகவல்களும் பாலிவுட்டில் வைரலாகி வருகின்றன. மேலும், நடிகர் ஹிரித்திக்கின் அடுத்த படத்திலும் இவர் இணைவார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











