Deepika Padukone: ஜவான் சக்சஸ்... ஷாருக்கானுக்கு சர்ப்ரைஸ் முத்தம் கொடுத்த தீபிகா படுகோன்!!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.

அட்லீ இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 700 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

ஜவான் படத்தில் பிளாஷ்ஃபேக் போர்ஷனில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார்.

இந்நிலையில், ஜவான் சக்சஸ்க்காக ஷாருக்கானை சந்தித்த தீபிகா படுகோன், சர்ப்ரைஸ்ஸாக முத்தம் கொடுத்து அசத்தினார்.

 Deepika Padukone: Deepika Padukone greeted Shah Rukh Khan with a kiss

ஷாருக்கானுக்கு முத்தம் கொடுத்த தீபிகா படுகோன்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. அட்லீ இயக்கிய இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பதான் படத்தைத் தொடர்ந்து ஜவானும் ஷாருக்கானுக்கு செம்ம கம்பேக் கொடுத்துள்ளது. ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 700 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியுள்ளது.

இதனையடுத்து நேற்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஷாருக்கான். ஜவான் படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்லும்விதமாக நடைபெற்ற இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ஷாருக்கானுடன், தீபிகா படுகோனேவும் கலந்துகொண்டார். ஜவான் வெற்றிக்காக நன்றி தெரிவித்த ஷாருக்கான், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

அதேபோல், ஜவான் சக்சஸ்க்காக ஷாருக்கானுக்கு தீபிகா படுகோன் செய்தியாளர்கள் முன்னிலையில் சர்ப்ரைஸ் கொடுத்தார். ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அதன் பின்னரும் தொடர்ந்து தீபிகா படுகோனேவுக்கு தனது படங்களில் வாய்ப்புக் கொடுத்து வந்தார் ஷாருக்கான். இதனால், ஷாருக்கான் கேட்டுக் கொண்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் என தீபிகா படுகோன் கூறியிருந்தார்.

 Deepika Padukone: Deepika Padukone greeted Shah Rukh Khan with a kiss

ஷாருக்கானின் பதான் படத்தில் கூட பிகினியில் நடித்து ரசிகர்களை கலங்கடித்தார் தீபிகா. மேலும், ஜவான் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளாராம். ஜவான் படத்தின் பிளாஷ்பேக் போர்ஷனில் ஷாருக்கான் ஜோடியாக ஐஸ்வர்யா ரத்தோர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ஷாருக்கான் - பிளாஷ்பேக் போர்ஷன் தேவையில்லாத திணிப்பு என விமர்சனங்கள் எழுந்தாலும், தீபிகா படுகோனுக்கு ரசிகர்களிடம் நல்ல ஹைப் கொடுத்திருந்தது.

இந்நிலையில், ஜவான் சக்சஸ் மீட்டில் கலந்துகொண்ட தீபிகா படுகோன், ஷாருக்கானை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார். ஷாருக்கானுக்கு தீபிகா படுகோன் முத்தம் கொடுத்த போட்டோ, டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஜவான் சக்சஸ் விழாவில், ஷாருக்கான் - தீபிகா படுகோன் கெமிஸ்ட்ரி தான் பலரின் கவனத்தையும் ஈர்த்ததாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X