பிரபாஸூடன் நடிக்க தீபிகாவுக்கு இவ்வளவு கோடி சம்பளமா..? தென்னிந்திய சினிமாவில் இதுதான் அதிகமாம்!

By

சென்னை: பிரபாஸூக்கு ஜோடியாக நடிக்கும் தீபிகா படுகோனுக்கு இதுவரை எந்த ஹீரோயினும் வாங்காத சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ் நடித்த 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கியவர் நாக் அஸ்வின். நடிகை சாவித்ரியின் பயோபிக் அது.

இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படம்.

ரூ.400 கோடி பட்ஜெட்

ரூ.400 கோடி பட்ஜெட்

மூன்றாம் உலகப் போரை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. தெலுங்கு சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனம் இது. இதில் பிரபாஸ் ஜோடியாக பாலிவுட் ஹீரோயினைத் தேடுவதாகக் கூறப்பட்டது.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

இதற்கிடையே, நடிகை தீபிகா படுகோனிடம் படக்குழு பேசி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. ஆனால் படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், தீபிகா படுகோன் நடிப்பதை படக்குழு சமீபத்தில் உறுதி செய்துள்ளது. திராவகம் வீசப்பட்ட பெண்ணாக சப்பக் என்ற படத்தில் நடித்த தீபிகா, அதற்கு பிறகு வேறு படங்களை கமிட் செய்யாமல் இருந்து வந்தார்.

ரூ.20 கோடி சம்பளம்?

ரூ.20 கோடி சம்பளம்?

இந்நிலையில், இந்தப் படத்தில் அவர் நடிக்க இருக்கிறார். இதில் நடிக்க அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் அதனால் தயாரிப்பு நிறுவனம் யோசித்து வந்ததாகவும் செய்திகள் வெளியானது. ஆனால், அவர் எவ்வளவு சம்பளம் கேட்டார் என்பது பற்றிய விவரங்கள் வரவில்லை. இந்நிலையில் அவர் ரூ.20 கோடி சம்பளம் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்குத் தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

அதிகப்பட்ச சம்பளம்

அதிகப்பட்ச சம்பளம்

இதுபற்றி அதிகாரபூர்வ தகவல் இல்லை என்றாலும் தென்னிந்திய சினிமாவில் ஒரு ஹீரோயினுக்கு வழங்கப்படும் அதிகப்பட்ச சம்பளம் இது என்று டோலிவுட்டில் தெரிவிக்கின்றனர். சில டாப் ஹீரோக்களுக்கு கூட இவ்வளவு சம்பளம் இல்லை என்று கூறப்படுகிறது. படத்துக்கு தற்காலிகமாக பிரபாஸ் 21 என்று டைட்டில் வைத்துள்ளனர். கொரோனா தொற்று பிரச்னைகள் ஓய்ந்த பின், இதன் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.

Recommended Video

Rana Daggubati Fiance Bio- Data | Rana Miheeka Bajaj, Marriage date
ராதே ஷ்யாம்

ராதே ஷ்யாம்

சூப்பர் ஹிட்டான 'பாகுபலி 2' படத்துக்குப் பிறகு நடிகர் பிரபாஸ், 'ராதே ஷ்யாம்' என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். ராதா கிருஷ்ண குமார் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியாக, பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாலிவுட் முன்னாள் ஹீரோயின் பாக்யஶ்ரீ முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X