தீபிகா படுகோனே தந்தை மருத்துவமனையில் அனுமதி.. அம்மா மற்றும் சகோதரிக்கும் கொரோனா உறுதி
பெங்களூரு: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ் படுகோனே கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனே அவரது மனைவி உஜாலா மற்றும் அவரது இளைய மகள் அனிஷா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று பிரகாஷ் படுகோனேவுக்கு காய்ச்சல் குறையாத நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தீபிகா படுகோனே அப்பா
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவின் தந்தையும் முன்னாள் பேட்மிண்டன் வீரருமான பிரகாஷ் படுகோனேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பே கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.

குடும்பத்துக்கே கொரோனா
நடிகை தீபிகா படுகோனே கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பையில் வசித்து வரும் நிலையில், தீபிகா படுகோனேவின் தந்தை பிரகாஷ் படுகோனே மற்றும் தாய் உஜாலா மற்றும் தங்கை அனிஷா ஆகிய மூவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் குறையல
ஆனால், தந்தை பிரகாஷ் படுகோனேவுக்கு ஒரு வார காலம் ஆகியும் காய்ச்சல் குறையாத நிலையில், பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த சனிக்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டார். தற்போது பிரகாஷ் படுகோனேவின் உடல் நிலை சீராகி வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேட்மிண்டன் வீரர்
65 வயதாகும் பிரகாஷ் படுகோனே இந்தியாவிற்காக பல முறை சர்வதேச அளவில் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு ஏகப்பட்ட கோப்பைகளையும் வென்றுள்ளார். 1980களில் அனைத்து இங்கிலாந்து சாம்பியன்ஸ் டைட்டில்களையும் வென்றவர் பிரகாஷ் படுகோனே என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் ஆறுதல்
நடிகை தீபிகா படுகோனேவின் தந்தை மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாய் மற்றும் தங்கைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தி அறிந்த ரசிகர்கள் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும், நீங்கள் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவுகளை போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











