என் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க தீபிகா படுகோனே பொருத்தமானவர் - பி.வி. சிந்து

சென்னை: தன்னுடைய வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா நடிப்பதை விட பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து. படத்தில் நடிக்க சம்மதம் சொன்ன நடிகை சமந்தாவிற்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பி.வி சிந்துவின் மாற்று கருத்து அதிர்ச்சியை அளித்துள்ளது.

உயிரோடு வாழ்ந்த, வாழ்கின்ற ஒரு மனிதரைப் பற்றியோ அல்லது வரலாறை அடிப்படையாக கொண்டோ பல வாழ்க்கை வரலாற்று படங்கள் இன்று எடுக்கப்படுகின்றன. அது தான் இப்போதைய ட்ரெண்டும் கூட. மேலும் யாருடைய வாழ்கை வரலாறு படமாக்கப்படுகிறதோ அவருடைய உண்மையான பெயரும் அவருடைய வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களும் படமாக்கப்படும்.

Deepika Padukone is better than Samantha in my biopic -P.V.Sindhu

அந்த வகையில் இன்று தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா, மகான்கள், விடுதலை வீரர்கள், அரசர்கள் என பலரது வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற படங்கள் எடுக்க பலர் முன்வருகின்றனர்.

அந்த வகையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அவரை எதிர்த்து விளையாடிய ஜப்பான் வீராங்கனையை தனது அபாரமான ஆட்டத்தால் வீழ்த்தினார். சாம்பியன் பட்டத்தை வென்றதோடு தங்கப்பதக்கத்தையும் வென்று இந்தியா திரும்பினார். அவரின் அபாரமான ஆட்டத்தை இந்தியாவே கொண்டாடியது.

இப்படி பல சாம்பியன்ஷிப்களை வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்துள்ள பி.வி.சிந்துவின் வாழ்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படவிருக்கிறது. அப்படத்தில் சிந்துவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தாவை தேர்ந்தேடுத்து அவரிடம் பேசி சம்மதமும் வாங்கியுள்ளனர் தயாரிப்பாளர்கள்.

Deepika Padukone is better than Samantha in my biopic -P.V.Sindhu

இந்த நிலையில் அதிரடியாக ஒரு மாற்று கருத்தை தெரிவித்துள்ளார் பி.வி.சிந்து. அதாவது தன்னை பற்றின வாழ்கை வரலாற்று படத்தில் நடிகை சமந்தா நடிப்பதை விட பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

நடிகை தீபிகாவும் ஒரு பேட்மிண்டன் வீரர் என்பதால் அவர் நடித்தால் சிறப்பாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று எனது கருத்தினை தெரிவித்தேன். மற்றபடி அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் தனிப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார் பி.வி.சிந்து.

படத்தில் நடிக்க நடிகை சமந்தா சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இவரின் மாற்று கருத்து அதிர்ச்சியை அளித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம், பி.வி.சிந்து வைத்த போட்டியில் வெல்லப்போகிறார்கள் சமந்தாவா அல்லது தீபிகா படுகோனேவா.

Deepika Padukone is better than Samantha in my biopic -P.V.Sindhu

இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன், தமிழ்நாட்டின் முன்னாள் முதல் அமைச்சர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து குயின் எனும் வெப் சீரிஸ் இயக்க உள்ள நிலையில் அதற்கு பல எதிர்ப்புகள் ஜெயலலிதாவின் குடும்பத்தில் இருந்து எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X