ராஜமெளலி – மகேஷ்பாபு கூட்டணியில் என்ட்ரி ஆகும் சீனியர் பாலிவுட் நடிகை… அப்போ ஆலியா பட்?
ஐதராபாத்: ராஜமெளலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கும் புதிய படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கிறார்.
அட்வென்சர்ஸ் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக கூறப்படும் இந்தப் படத்தில் ஆலியா பட் ஹீரோயினாக நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதிருப்தியில் ஆலியா பட்?
கடந்த மார்ச் மாதம் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மூலம் மீண்டும் ஒரு பிரம்மாண்டமான விஷுவல் ட்ரீட் கொடுத்தார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரத்து 400 கோடிக்கும் அதிகமாக வசூலை தட்டித் தூக்கியது. இந்நிலையில், ஆர்ஆர்ஆர் ஆஸ்கரில் 15 பிரிவுகளில் போட்டியிடுவதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இதனிடையே, இந்தப் படம் வெளியாகிருந்த நேரத்தில், தனக்கு காட்சிகள் அதிகம் இல்லை என ராஜமெளலி மீது ஆலியா பட் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது.

மகேஷ்பாபு படத்தில் ஆலியா பட்
ஒருகட்டத்தில் ராஜமெளலியை டிவிட்டரில் அன்ஃபாலோ செய்தார் ஆலியா பட். அதன்பிறகு, ராஜமெளலி மீது கோபம் இல்லை எனவும் விளக்கம் கொடுத்தார். இதனால் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவுள்ள ராஜமெளலி, அதில் ஆலியா பட்டுக்கு ஹீரோயின் வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியானது.. 'SSMB 29' என்ற டைட்டிலில் உருவாகவுள்ள இந்தப் படம் "ஹாலிவுட் தரத்தில் உலகையே சுற்றி வரும் ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக இருக்கும் எனவும், இதில், ஆலியா பட்டின் கேரக்டர் செம்மையாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.

சீனில் வந்த சீனியர் நடிகை
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்ட ஆலியா பட், இப்போது கர்ப்பமாக உள்ளார். இதனால், அவர் ஓய்வில் இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், 'SSMB 29' படத்தில் ஆலியா பட்டிற்கு பதிலாக, மற்றொரு பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனை கமிட் செய்ய படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இதற்காக, தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இது உறுதியாகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. திடீரென ஆலியா பட்க்கு பதிலாக தீபிகா படுகோனை படக்குழு அணுகியுள்ளது, ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்தியும் இணைகிறாரா?
இதனிடையே, ராஜமெளலி இயக்கும் இந்தப் படத்தில் மகேஷ் பாபுவுடன் கார்த்தியும் முக்கியமான பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே படக்குழு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அதற்கு கார்த்தியும் ஓக்கே சொல்லிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ்பாபுவுக்கு இணையான முக்கியமான ரோலில் கார்த்தி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதன்முறையாக ராஜமெளலி, மகேஷ்பாபு இருவருடனும் கார்த்தி பணிபுரிய உள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட்டாக அமைந்துள்ளது. இதுகுறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











