கண்டுக்கவா மாட்டேங்குறீங்க?: ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த தீபிகா படுகோனே
மும்பை: ஒரேயொரு பார்ட்டி கொடுத்து அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்துள்ளார் தீபிகா படுகோனே.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்துள்ள படம் பத்மாவதி. படத்திற்கு குஜராத் மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பத்மாவதி படம் டிசம்பர் மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது.

கடுப்பு
தீபிகா பத்மாவதி படத்திற்காக ரொம்பவே கஷ்டப்பட்டுள்ளார். அப்படி இருக்கும் போது ட்ரெய்லர்களை பார்த்த யாரும் அவரை கண்கொள்ளவில்லை. கூமர் பாடலை பார்த்தும் யாரும் அவரை பற்றி பெரிதாக பேசவில்லை.

பாலிவுட்
தன்னை யாரும் கண்டுகொள்ளாததால் கவலையில் இருந்த தீபிகா பாலிவுட் பிரபலங்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்துவிட்டார்.

கோபம்
தனக்கு தெரியாமல் பத்மாவதி 3டி ட்ரெய்லர் வெளியீட்டுக்கு ரகசியமாக சென்றதால் தீபிகா மீது ரன்வீர் சிங் கோபத்தில் உள்ளார். இருப்பினும் அவர் தீபிகாவின் பார்ட்டியில் கலந்து கொண்டார்.

பாலிவுட்
தீபிகா ஏன் இப்படி செய்துவிட்டார் என்று 3டி நிகழ்ச்சி பற்றி பேசியவர்களை தற்போது அவர் கொடுத்த பார்ட்டி பற்றி பேச வைத்துவிட்டார். இது தான் தீபிகாவின் தந்திரம் என்கிறார்கள் பாலிவுட்காரர்கள்.


Click it and Unblock the Notifications











