ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கே முதுகு தண்டு இருக்கிறதா.. புயலை கிளப்பிய தீபிகாவின் ஜே.என்.யூ விசிட்!

டெல்லி: தீபிகா படுகோனேவின் ஜே.என்.யூ விசிட் பாலிவுட்டில் மிகப்பெரிய புயலையும் பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

நாளை மறுநாள் தீபிகா படுகோனே தயாரித்து நடித்துள்ள சபாக் படம் வெளியாகவுள்ள நிலையில், அரசுக்கு எதிராக தீபிகா படுகோனே இப்படியொரு துணிச்சலான அடியை முன்வைத்துள்ளது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

மேலும், பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் என சொல்லப்படும் ஹீரோக்கள் இந்த விசயத்தில் வாய் திறக்காமல் மெளனம் சாதித்து வரும் நிலையில், சிங்கப்பெண்ணாக தீபிகா படுகோனே களத்தில் இறங்கியது.

ஹீரோக்களை விட பாலிவுட்டில் ஹீரோயின்களுக்கே முதுகு தண்டு இருக்கிறது என்ற பயங்கரமான கருத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

செம்ம துணிச்சல்

செம்ம துணிச்சல்

ஜனவரி 10ம் தேதி தனது தயாரிப்பில் வெளியாகவுள்ள சபாக் படம் ரிலீசாகுமா? அதற்கு பிரச்சனைகள் மற்றும் அழுத்தங்கள் தரப்படுமா? என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் சிங்கப்பெண்ணாக மாணவர்கள் பக்கம் நின்று ஆதரவு தெரிவித்துள்ள தீபிகா படுகோனேவுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

எல்லாம் பப்ளிசிட்டி

எல்லாம் பப்ளிசிட்டி

தபங் 3 படம் வெளியாவதற்கு முன்னதாக சல்மான் கான் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிரான மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை. அதனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பாலிவுட்டில் பெறவில்லை. அதுபோன்ற நிலை தீபிகாவின் சபாக் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரக்கூடாது என்ற பப்ளிசிட்டிக்காக இப்படி செய்துள்ளார் என தீபிகாவின் ஹேட்டர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

அனுராக் கஷ்யாப்

அனுராக் கஷ்யாப்

பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான அனுராக் கஷ்யாப், குரல் கொடுக்கும் அளவுக்கு எந்த முன்னணி ஹீரோக்களும் இதுவரை மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. அக்‌ஷய் குமார் குறித்த ஒரு ட்வீட்டுக்கும் அனுராக் கஷ்யாப் அவர் முதுகு தண்டு இல்லாதவர் என்ற ரீதியில் பதிலளித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது.

பாலிவுட் நடிகைகள்

பாலிவுட் நடிகைகள்

முன்னணி பாலிவுட் நடிகர்கள் குரல் கொடுக்காத நிலையில், பாலிவுட் நடிகைகளான ஹூமா குரேஷி, ஸ்வாரா பாஸ்கர், டாப்ஸி, தியா மிர்ஸா, சோனம் கபூர், ஆலியா பட், தீபிகா படுகோனே மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட பல பாலிவுட் நடிகைகள் மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் துணிச்சலாக குரல் கொடுத்துள்ளனர்.

தீபிகா தலைக்கு பத்து கோடி

தீபிகா தலைக்கு பத்து கோடி

பத்மாவத் படத்தில் தீபிகா நடித்த போதும் அவருக்கு பல சர்ச்சைகள் எழுந்தன. பா.ஜ.,க தலைவர் ஒருவர் தீபிகாவின் தலை வெட்டிக் கொண்டு வருபவருக்கு 10 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்றார். கர்ணி சேனா அமைப்பினர் சூர்ப்பணகையை போல தீபிகாவின் மூக்கை அறுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

ஹீரோக்களுக்கு ஏன் துணிச்சல் இல்லை?

ஹீரோக்களுக்கு ஏன் துணிச்சல் இல்லை?

ஆலியா பாட், சோனம் கபூர், தீபிகா படுகோனே போன்ற நடிகைகள் தங்கள் வாழ்வை பொருட்படுத்தாது ரிஸ்க் எடுத்து இது போன்ற துணிச்சலான செயல்களில் ஈடுபட்டு வரும்போது, பாலிவுட்டின் கான் நடிகர்கள், பச்சன் நடிகர்கள், கபூர் நடிகர்கள் எல்லாம் எங்கே போய் ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர் என்ற கேள்வியை பாலிவுட் இளைஞர்கள் தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.

அப்போது பேசினார்கள்.. இப்போது ஏன்?

அப்போது பேசினார்கள்.. இப்போது ஏன்?

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என அரசியல் கருத்தை ஆணித்தரமாக பதியவைத்த ஆமிர்கான் மற்றும் ஷாருக்கான் கூட தற்போது ஏன் எந்தவொரு கருத்தையும் கூற மறுக்கின்றனர் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

பாலிவுட்டை தாண்டியும் பெண்கள்

பாலிவுட்டை தாண்டியும் பெண்கள்

பாலிவுட் நடிகைகள் மட்டுமின்றி சிஏஏ மற்றும் என்.ஆர்.சி., பிரச்சனைகளில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். பெரிய பெரிய போராட்டங்களை துணிச்சலோடு சந்திக்கின்றனர். அதனால் வரும் பின் விளைவுகளையும் பாதிப்புகளையும் தாங்கிக் கொண்டு தங்களின் குரலை தவறாமல் கொடுத்து வருகின்றனர்.

அதிருப்தி

அதிருப்தி

ஆனால், கோடிக் கணக்கில் சம்பாதிக்கும் ஸ்டார் நடிகர்கள் சத்தம் போடாமல் சம்பாதித்து கொண்டே இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X