மீண்டும் ஹாலிவுட்டில் தீபிகா படுகோனே
சென்னை: நடிகை தீபிகா படுகோனே மீண்டும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.
கடந்த ஆண்டு ட்ரிப்பிள் எக்ஸ் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் தீபிகா படுகோனே.

ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்து நம்ம தீபிகாவா இது என ரசிகர்கள் ஆச்சர்யமடைந்தனர். அதன் பிறகு வெளியான பத்மாவதி திரைப்படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சைகள் யாவரும் அறிந்ததே. இப்போது ரன்வீர் சிங்குடன் காதல், நவம்பர் மாதம் திருமணம் என ஊடகங்களை தன் பக்கம் திருப்பிக் கொண்டே இருக்கிறார்.
இந்த நிலையில், ட்ரிப்பிள் எக்ஸ் திரைப்படத்தின் அடுத்த பாகத்திலும் தீபிகா நடிப்பது உறுதியாகிவிட்டது. இயக்குனர் டி.ஜே.கருசோ அத்தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.
பிரபல சீனப்பாடகாரான ராய் வாங்-கை ட்ரிப்பிள் எக்ஸ் குடும்பத்திற்கு வரவேற்பதாக கருசோ ட்வீட் செய்தபோது தீபிகா ரசிகர் ஒருவர், தீபிகா பற்றிக் கேட்டதற்கு அவரும் இப்படத்தில் உள்ளார் என பதிலளித்துள்ளார்.
வின் டீசல், சாமுவேல் ஜாக்சன், டோனி யென் என நட்சத்திரங்கள் அடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்க உள்ளது. இப்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











