கோவிலுக்கு தாலி இல்லாமல் வந்த தீபிகா படுகோன்.. விளாசும் இணையவாசிகள்!
சென்னை: பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் மும்பையின் கிர்கான் பகுதியில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நிலையில், சற்று முன் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அவர் சிக்தி விநாயகர் கோவிலுக்கு தாலி அணியாமல் சென்றது தற்போது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது
பிப்ரவரி 2024 இல் தீபிகாவும் ரன்வீரும் சேர்ந்து தீபிகா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர். அவர் அறிவித்த போதே மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார். தம்பதிகள் கர்ப்பத்தை அறிவித்ததைத் தொடர்ந்து பலரும் அவர்களுக்கு இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். செப்டம்பர் கடைசி வாரத்தில் தீபிகா தனது குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தாலி அணியவில்லை: இந்நிலையில், தீபிகா தனது கணவர் ரன்வீர் சிங்குடன் சித்திவிநாயகர் கோவிலுக்கு பச்சை நிறத்தில் பனாரஸ் பட்டு சேலை அணிந்து சென்றிருந்தார். இந்த போட்டோக்கள் மிகப்பெரிய அளவில் டிரெண்டான நிலையில், அவர் கோவிலுக்கு சென்ற போது, தாலி அணியாமல் சென்றது பேசு பொருளாகி உள்ளது. இது குறித்து இணையவாசி ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
தாலி வாங்க காசு இல்லையா?: அதில், இவ்வளவு பணம் சம்பாதித்தாலும், மாங்கல்யம் கூட வாங்க முடியாமல் தீபிகா இருக்கிறார். இதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டு, மேலும், தீபிகா தனிஷ்க் லோலின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார் என தீபிகாவை கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டு இருந்தார். இவரின் இந்த பதிவு இணையத்தில் பெரும் புயலை கிளப்பியதையடுத்து பலரும் தீபிகாவை வசைபாடி வந்தனர்.
தேவையில்லாத வேலை: மற்றொரு இணையவாசி தீபிகாவிற்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார். அதில், இந்து கலாச்சாரங்களில் மாங்கல்யம் அணிவது கட்டாயமான விஷயம் இல்லை, அதுவும் கோவிலுக்கு தாலி அணிந்து தான் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை, பாரம்பரியத்தை பின்பற்றுவது அல்லது பின்பற்றாதது அவர் அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஒரு கர்ப்பிணிப் பெண்ணை இணையத்தில் இப்படி வசை பாடுவதை விட்டு உங்கள் சொந்த வேலையை பாருங்கள் என இணையவாசி காட்டமாக கருத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











