Deepika Padukone: எங்களுக்கா விவாகரத்து.. வாய்ப்பே இல்லை ராஜா.. தீபிகா படுகோன் போட்ட சூப்பர் பதிவு!
மும்பை: பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் கூடிய விரைவில் இருவரும் விவாகரத்து செய்துவிடப் போவதாகவும் வதந்திகள் வட மாநில மீடியாக்களில் தீயாக பரவி வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு சூப்பரான பதிவை தீபிகா படுகோன் போட்டுள்ளார்.
ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்த நிலையில், காதல் வலையில் விழுந்தனர். கடந்த 2018ம் ஆண்டு இருவரும் பிரம்மாண்டமாக தங்கள் திருமணத்தை நடத்தினர்.

அதன் பின்னர் வெளியான 83 படத்திலும் ரன்வீர் சிங் கபில் தேவாக நடித்த நிலையில், அவரது மனைவியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார்.
விவாகரத்து வதந்தி: 2018ல் திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இன்னமும் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோன் ஜோடியினர் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வரவில்லை. இதனால், பாலிவுட்டில் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் ரன்வீர் சிங்கின் கையை பிடிக்காமல் உதறிவிட்டு தீபிகா படுகோன் தனியாக சென்ற காட்சிகள் விவாகரத்து வதந்தியை பற்ற வைத்தது.
பதான் படத்தில் படு தாராளம்: ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பதான் படத்தில் படு தாராளமாக தீபிகா படுகோன் நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு நடித்திருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. திருமணத்துக்கு பின்னர் கவர்ச்சியாக நடிக்காமல் இருந்து வந்த தீபிகா படுகோன் திடீரென சுனாமி போல கவர்ச்சியை காட்டத் தொடங்கியது இந்த பஞ்சாயத்தை மேலும் ஊதிப் பெரிதாக்கியது. பதான் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துள்ள ஜவான் படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோன் நடித்துள்ள நிலையில், ஏகப்பட்ட கிசுகிசுக்களும் கிளம்பின.

முற்றுப்புள்ளி வைத்த தீபிகா: இந்நிலையில், சமீபத்தில் வெளியான ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கி கதா படத்தின் ப்ரீமியர் காட்சியை தீபிகா படுகோன் கண்டு ரசித்த புகைப்படங்கள் வெளியாகியே தீயாய் பறந்த விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்நிலையில், அதை மீண்டும் தெளிவுப்படுத்தும் விதமாக கணவர் ரன்வீர் சிங் குறித்து இன்ஸ்டாகிராமில் புதிய போஸ்ட் ஒன்றையும் தீபிகா படுகோன் பதிவிட்டுள்ளார்.
நண்பரை திருமணம் செய்து கொள்ளுங்கள்: நடிகை தீபிகா படுகோன் நேற்று இரவு வெளியிட்ட பதிவில் நல்ல நண்பரையே காதலித்து திருமணம் செய்துக் கொள்ளுங்கள், அப்போது தான் உங்கள் வாழ்க்கை ஹேப்பியாக இருக்கும். நானும் ரன்வீர் சிங்கும் இருப்பது போல என நண்பர்கள் தின போஸ்ட்டை போட்டு ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











