FIFA World Cup 2022 : உலகக் கோப்பையை அறிமுகம் செய்த தீபிகா படுகோன்.. இணையத்தில் பெருகும் ஆதரவு!
FIFA உலகக் கோப்பை போட்டியில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கலந்து கொண்டு உலகக்கோப்பையை அறிமுகம் செய்து வந்தார்.
கடந்த சில நாட்களான சோஷியல் மீடியாவில் ஹாட்டாப்பிக்காக இருந்து அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து விடுகிறார் தீபிகா படுகோனே.
இத்தனை சர்ச்சைகளுக்கும் காரணம் பதான் படத்தில் வரும் 'பேஷரம் ரங்' பாடல் தான்.

பதான்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள திரைப்படம் பதான். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தில் தீபிகாவுக்கு ரூ.15 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காவி உடை சர்ச்சை
சில தினங்களுக்கு முன்பு பதான் படத்திலிருந்து பாடலின் வீடியோ வெளியானது. ரொமான்ஸ் மற்றும் கவர்ச்சியான அந்த டூயட் பாடலில் தீபிகா காவி நிற பிகினியும், ஷாருக்கான் பச்சை நிற ஆடையும் அணிந்திருந்தனர். இதனைச் சுட்டிக்காட்டிய மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, தீபிகா, ஷாருக் இருவருமே காவி உடை வேண்டுமென்றே அவமதிக்கப்பட்டுள்ளது.

இந்துக்கள் மனதை புண்படுத்திவிட்டனர்
இந்துக்கள் மனதை புண்படுத்திய இந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்படும் படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனால், மக்கள் இப்படத்தை புறக்கணிக்க வேண்டும். பதான் படத்திலிருந்து பாடலை நீக்க வேண்டும் அப்படி நீக்கவில்லை என்றால், படம் திரையிடப்படும் திரையரங்கை தீயிட்டு கொளுத்தப்படும் என பதான் படம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

FIFA உலகக் கோப்பை 2022
இந்நிலையில், கத்தார் லுசைல் ஸ்டேடியத்தில் நடந்த அர்ஜென்டினா-பிரான்ஸ் இடையேயான இறுதி போட்டித் தொடரில், உலக கால்பந்தில் 106வது இடத்தில் உள்ள இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார் தீபிகா. FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் பிரான்ஸை பெனால்டியில் தோற்கடித்த அர்ஜென்டினாவுக்குச் சென்ற பளபளப்பான தங்கக் கோப்பையை தீபிகா படுகோனே அறிமுகம் செய்த வைத்தார்.

தீபிகாவுக்கு பெருகும் ஆதரவு
ஃபிஃபா உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய தீபிகாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. ஃபிஃபா உலகக் கோப்பை மூலம் தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கானை உலகம் அறியும், நரோட்டம் மிஸ்ரா அல்ல என்று ட்விட்டரில் ரசிகர்கள் தங்கள் உணர்வை எதிரொலித்து வருகின்றனர்.

ஷாருக்கான்
மேலும் FIFA உலகக் கோப்பை 2022 இறுதிப் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தங்கக் கோப்பையை தீபிகா வெளியிட்டபோது, ஷாருக்கான் கால்பந்தாட்ட ஜாம்பவான் வெய்ன் ரூனியுடன் இணைந்து தங்களின் வரவிருக்கும் படமான பதானை விளம்பரப்படுத்தி நடனமாடினார்.


Click it and Unblock the Notifications











