“திருமணத்திற்கு முன் லிவிங் டுகெதராக வாழ்வதில் உடன்பாடில்லை”.. வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை!

திருமணத்திற்கு முன்னதான லிவிங் டுகெதரில் நம்பிக்கையில்லை என தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.

மும்பை: திருமணத்திற்கு முன் கணவர் ரன்வீர் சிங்குடனான லிவிங் டுகெதர் உறவு குறித்து நடிகை தீபிகா படுகோன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

பாலிவுட்டின் மிகவும் க்யூட்டான நட்சத்திர தம்பதி தீபிகா படுகோன் - ரன்வீர் சிங். இருவரும் நீண்ட காலம் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களது திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதி இத்தாலியின் லேக் கோமா நகரில், வில்லா தெ பால்பியானெல்லோ எனும் நட்சத்திர விடுதியில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் மும்பையில் வசித்து வருகின்றனர்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் முதலாம் ஆண்டு திருமண தினம் அடுத்த மாதம் வரவுள்ளது. இதனை கொண்டாட இருவரும் தயாராகி வருகின்றனர். திருமணத்தை போலவே முதலாம் ஆண்டு திருமண நாளையும் வெளிநாட்டில் கொண்டாட இவர்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் அடிபடுகிறது.

உடன்பாடு இல்லை

உடன்பாடு இல்லை

இந்நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தீபிகா பேட்டி அளித்த போது, திருமணத்திற்கு முன்பு ரன்வீருடன் லிவிங் டுகெதர் அடிப்படையில் வாழ்ந்துள்ளீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தீபிகா, திருமணத்திற்கு முன்பே அப்படி வாழ்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றார்.

மிகச் சிறந்த முடிவு

மிகச் சிறந்த முடிவு

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, "திருமணத்திற்கு முன்பே லிவிங் டுகெதர் முறையில் வாழ ஆரம்பித்துவிட்டால், திருமணத்திற்கு பிறகு ஒருவரை பற்றி மற்றவர் அறிந்துகொள்வதற்கான தேடுதல் இருக்காது. இந்த ஒரு ஆண்டு முழுவதும் நாங்கள் ஒன்றாக வாழ்ந்து, ஒருவரையொருவர் அறிந்துகொண்டு வருகிறோம். இது தான் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் எடுத்த மிகச்சிறந்த முடிவு", என தீபகா கூறியுள்ளார்.

முழு நம்பிக்கை

முழு நம்பிக்கை

மேலும், "பொதுவாக திருமண வாழ்வில் ஒருவரை பற்றி மற்றவர் குறைகூறுவது தான் அதிகமாக இருக்கும். ஆனால் அந்த அனுபவம் எங்களுக்கு ஏற்படவில்லை. திருமண பந்தத்தில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அதன் ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் அனுபவித்து வருகிறோம்", என்கிறார் அவர்.

கபீர்கான் 83

கபீர்கான் 83

தீபிகா படுகோன் தற்போது மேக்னா குல்சாரின் சபாக் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை பற்றிய படம் அது. கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து, கபீர் கான் 83 எனும் படத்திலும் தீபிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X