Big Breaking: ’பிரபாஸ் 21’ படத்தில் ஹீரோயின் யார் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சென்னை: நடிகர் பிரபாஸின் 21வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்கப் போவது உறுதியாகி விட்டது.

Recommended Video

கண்ட இடங்களில் கை வைத்த இளைஞர்.. தொப்புள் தெரிய மீரா மிதுனின் செக்ஸி ஆட்டம்.. தீயாய் பரவும் வீடியோ!

நடிகையர் திலகம் படத்தை இயக்கி இந்தியளவில் பிரபலமான இயக்குநர் நாக் அஸ்வினின் அடுத்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகளவில் மார்க்கெட்

உலகளவில் மார்க்கெட்

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் உலக அரங்கில் நடிகர் பிரபாஸின் மார்க்கெட்டை உச்சத்துக்கு உயர்த்தி இருக்கிறது. 1500 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய பாகுபலி படத்தை தொடர்ந்து, இந்தியிலும் அவரது மார்க்கெட் அதிகரித்து இருக்கிறது. டோலிவுட் நடிகராக இருந்த அவர், தற்போது பான் இந்திய நடிகராக மாறியுள்ளார்.

நடிகையர் திலகம் இயக்குநர்

நடிகையர் திலகம் இயக்குநர்

2015ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா, நானி, ரிது வர்மா மற்றும் மாளவிகா நாயர் நடிப்பில் வெளியான எவ்வடே சுப்ரமணியம் படத்தை இயக்கி டோலிவுட்டில் அறிமுகமானவர் நாக் அஸ்வின். கடந்த 2018ம் ஆண்டு வெளியான நடிகையர் திலகம் படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை கீர்த்தி சுரேஷ், சமந்தா, துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கி தேசிய விருதுகளை தட்டி தூக்கினார்.

பிரபாஸை வைத்து

பிரபாஸை வைத்து

டோலிவுட்டின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ், தனது 50 ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், பிரபாஸின் 21வது படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கப் போவதாக சில மாதங்களுக்கு முன்பாக மிகப்பெரிய அறிவிப்பு வெளியானது.

யார் ஹீரோயின்

யார் ஹீரோயின்

இந்நிலையில், தற்போது பிக் பிரேக்கிங்காக பிரபாஸின் 21வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இந்தியாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சென்னை எக்ஸ்பிரஸ், பத்மாவத் என பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த தீபிகா படுகோனே இந்த ஆண்டு சபாக் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட் வரை புகழ்

ஹாலிவுட் வரை புகழ்

இந்தியாவின் முன்னணி நடிகையாக மட்டுமின்றி சர்வதேச அளவில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ரசிகர்கள் உள்ளனர். பிரியங்கா சோப்ராவை போலவே இவரும் ஹாலிவுட் படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். வின் டீசலின் டிரிபிள் எக்ஸ் 3 படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த இவர், டிரிபிள் எக்ஸ் 4ம் பாகத்திலும் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X