சந்தோஷமாக கல்யாண கனா காணாமல் பயத்தில் இருக்கும் தீபிகா
டெல்லி: தனக்கு மீண்டும் அதே போன்று நடந்துவிடுமோ என்ற பயத்தில் இருப்பதாக நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. அதிகம் சம்பளம் வாங்கும் அவருக்கும், நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் வரும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தீபிகா தனது பயத்தை பற்றி பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது,

பயம்
எனக்கு டென்ஷன் ஏற்படத் துவங்கினாலே வயிற்றில் ஏதோ செய்யும். தீபிகா, மனதை கட்டுப்படுத்து, உன்னை கவனித்துக் கொள் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். மூச்சை இழுத்து விட வேண்டும், நன்றாக தூங்க வேண்டும் என்று நினைப்பேன். மன அழுத்தம் ஏற்பட்டதால் என் உடல் நலத்தையும் பேணிக் காப்பதின் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டேன்.

மன அழுத்தம்
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதை என்னால் மறக்கவே முடியாது. அது மிகவும் மோசமான அனுபவம். மீண்டும் மன அழுத்தம் ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் இல்லாமல் இல்லை. மீண்டும் அந்த மோசமான அனுபவம் ஏற்படவே கூடாது. அதனால் எண்ணங்களை கட்டுப்படுத்தி வருகிறேன். நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதை என் அம்மா தான் கண்டுபிடித்தார்.

தெரியவில்லை
எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அப்போது தான் நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதை என் அம்மா கண்டுபிடித்தார். வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சந்தோஷமே இல்லாமல் இருந்தேன். ஏதோ பெயருக்கு வாழ்ந்த என்னை என் அம்மா தான் மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றார். என்னை பரிசோதனை செய்த அவர் எனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.

கருத்து
என்னை பற்றி யார் என்ன நினைப்பார்களோ என்ற பயம் இல்லாமல் இன்று மகிழ்ச்சியாக உள்ளேன். நாம் எளிதில் அடுத்தவர்களை பற்றி ஏதாவது கணித்து இவர்கள் இப்படித் தான் என்று முடிவு செய்துவிடுகிறோம். மன அழுத்தம் பற்றி வெளியே கூற வெட்கப்பட வேண்டாம். உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்தால் சரி செய்துவிடலாம் என்கிறார் தீபிகா படுகோனே.


Click it and Unblock the Notifications











