வாத்தி கம்மிங் பாடலுடன் அசத்தல் வீடியோ வெளியிட்ட தீபிகா படுகோனே

மும்பை : இந்திய சினிமாவின் ராணி என சொல்லும் அளவிற்கு பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் பாலிவுட் பியூட்டி தீபிகா படுகோனே. இவர் தமிழில் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் டாப் ஹீரோயினான தீபிகா தற்போது தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அசத்தலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பின்னணியில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க, அதற்கு ஏற்றவாறு, பல இடங்களில் தீபிகா ஸ்டைலாக நடந்து வருவதாக அந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.

Deepika Padukones mass video with Thalapathy Vijays vaathi coming

இதனை கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள், இந்த வீடியோவை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். அதனால் காட்டுத் தீ போன்று இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் தீபிகா பதிவிட்டுள்ள இந்த வீடியோவிற்கு இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது.

விஜய் உடன் அடுத்த படத்தில் தீபிகா இணைந்து நடிக்க போகிறாரா, அதற்காக தான் இந்த வீடியோவா என்றும் பலர் கேட்டு வருகின்றனர். எப்படி இருந்தாலும் இரண்டு மெகா ஸ்டார்களின் ரசிகர்களும் இந்த வீடியோவால் குஷியாகி உள்ளனர்.

மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையமைத்த வாத்தி கம்மிங் பாடல், படம் ரிலீசாவதற்கு முன்பே தாறுமாறாக ஹிட்டாகி விட்டது. யூட்யூப்பில் இந்த பாடல் புதிய சாதனையை படைத்து விட்டது. வாத்தி கம்மிங் பாடலுக்கு ஏற்கனவே பிரபலங்கள் பலர் ஆடி, வீடியோ வெளியிட்டு, அந்த வீடியோக்களும் வைரலாகின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X