இவங்கதான் பெஸ்டீஸ்.. இந்த லாக்டவுனிலும் பள்ளி தோழிகளை மறக்காத தீபிகா படுகோனே!

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது பள்ளி தோழிகளுடன் வீடியோ கால் பேசும் ஸ்க்ரீன் ஷாட்டை இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

Recommended Video

என்ன தீபிகா இது.. அந்த இடத்துலயும் லுங்கி டான்ஸா - வீடியோ

பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தீபிகா படுகோனே நடிகர் ஷாருக்கானின் ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் அனிமேஷன் கதாபாத்திரத்தில் தீபிகா நடித்திருந்தார்.

டாப் ஹீரோயின்

டாப் ஹீரோயின்

பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு போட்டியாக டஃப் கொடுத்து வருகிறார் நடிகை தீபிகா படுகோனே. சஞ்சய் லீலா பன்சாலி நடிப்பில் வெளியான பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் படங்களில் லீடு ரோலில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தையே கொண்டு இருக்கிறார் தீபிகா படுகோனே.

டிரிபிள் எக்ஸ் நாயகி

டிரிபிள் எக்ஸ் நாயகி

பாலிவுட்டின் முன்னணி நாயகியாக கலக்கி வந்த தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். வின் டீசர் நடிப்பில் வெளியான டிரிபிள் எக்ஸ் 3ம் பாகத்தில் செரினா அங்கர் கதாபாத்திரத்தில் வின் டீசலுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

செம போல்டு

செம போல்டு

சிஏஏ விவகாரம் மற்றும் டெல்லி பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக எந்தவொரு டாப் பாலிவுட் நடிகர்களும் ஆதரவு குரல் கொடுக்காத நிலையில், நடிகை தீபிகா படுகோனே, தனது சபாக் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும், பரவாயில்லை என மாணவர்களுக்கு ஆதரவாக நின்று தனது நிலைப்பாட்டை செம போல்டாக தெரிவித்திருந்தார்.

பள்ளி தோழிகளுடன்

பள்ளி தோழிகளுடன்

34 வயதாகும் நடிகை தீபிகா படுகோனே, இந்த லாக்டவுனில் தனது பள்ளி தோழிகளான திவ்யா நாராயண் மற்றும் சினேகா ராமசந்தர் ஆகிய இரு பெண்களுடன் வீடியோ காலில் அரட்டை அடித்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். என்றுமே இவர்கள் தான் தனது பெஸ்டீஸ் என்றும் தீபிகா குறிப்பிட்டுள்ளார். தீபிகா ஷேர் செய்த அந்த புகைப்படம் 1 மில்லியன் ரசிகர்களை கடந்து வைரலாகி வருகிறது.

கணவருக்கு டார்ச்சர்

கணவருக்கு டார்ச்சர்

கொரோனா பாதிப்பால் பல படங்களுக்கு கொடுக்கப்பட்ட கால்ஷீட் எல்லாம் வீணாகி வரும் நிலையிலும், இந்த லாக்டவுனில் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்குடன் பொழுதை கழிக்கும் வாய்ப்பு தீபிகா படுகோனேவுக்கு உற்சாகத்தை அளித்து வருகிறது. சமீபத்தில், ரன்வீர் தூங்கும் போது, அவரது நெற்றியில் Husband என ஸ்டிக்கர் ஒட்டி தீபிகா டார்ச்சர் செய்திருந்தார்.

அடுத்தடுத்து

அடுத்தடுத்து

ரன்வீர் சிங் நடிப்பில் உருவான 83 படத்திற்கு OTT பிளாட்ஃபார்ம்கள் கடும் போட்டி போட்டு வருகின்றன. அந்த படத்தில் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக தீபிகா நடித்துள்ளார். மேலும், சப்னா தீதி பயோபிக், மகாபாரதம், ஷாகுன் பாத்ரா படம், டிரிபிள் எக்ஸ் 4ம் பாகம் என பல படங்கள் தீபிகா படுகோனேவின் கைவசம் இருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X