கவர்ச்சியில் எல்லை மீறும் தீபிகா படுகோன்... இதுதான் காரணமா..?: பாய்காட் சிக்கலில் பதான்!

மும்பை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படம் ஜனவரி 25ம் திரையரங்குகளில் வெளியாகிறது.
பான் இந்தியா படமாக உருவாகியுள்ள பதானில் ஷாருக்கான் ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.
இந்நிலையில், பதான் படத்தின் முதல் பாடலில் தீபிகா படுகோன் காட்டிய கவர்ச்சி சர்ச்சைகளுடன், பாய்காட் சிக்கலையும் எதிர்கொண்டுள்ளது.

 ஷாருக்கானின் பதான்

ஷாருக்கானின் பதான்

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக 2018ம் ஆண்டில் ஜீரோ திரைப்படம் வெளியாகியிருந்தது. அதன்பின்னர் அவர் தற்போது நடித்துள்ள பதான் ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இதனை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், ஹான் ஆப்ரஹாம் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். ஆக்சன் ஜானரில் உருவாகியுள்ள பதான், ஷாருக்கானுக்கு மாஸ் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கவர்ச்சியில் எல்லை மீறும் தீபிகா

கவர்ச்சியில் எல்லை மீறும் தீபிகா

பதான் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி வைரலானது. இந்நிலையில், 12ம் தேதி இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. 'Besharam Rang' என்ற டைட்டில் வெளியான இந்த பாடல், ரசிகர்களின் தூக்கத்தை கலைத்துள்ளது. ஷாருக்கானுடன் தீபிகா போட்ட கவர்ச்சி ஆட்டமே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. படு கிளாமராக இறங்கி அடித்துள்ள தீபிகா படுகோன், பாலிவுட் நடிகைகளுக்கு சவால் விட்டுள்ளார். பீச்சில் பிகினியோடு தீபிகா போட்ட ஆட்டத்தைப் பார்த்து, பாலிவுட்டே ஆடிப் போயுள்ளது.

 இதுதான் காரணமா?

இதுதான் காரணமா?

ஷாருக்கானின் 'ஓம் சாந்தி ஓம்' படத்தில் தான் தீபிகா அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சென்னை எக்ஸ்பிரஸ். ஹேப்பி நியூ இயர் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்த இந்தக் கூட்டணி, தற்போது பதானிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் பதான் முதல் பாடலை போல, படம் முழுவதும் கிளாமர் விருந்து படைத்துள்ளாராம் தீபிகா படுகோன். தீபிகாவின் தாராள கவர்ச்சிமயத்துக்கு சம்பளம் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதுவரை 5 முதல் 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த தீபிகா படுகோன், பதான் படத்திற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளாராம்.

 பாய்காட் சிக்கலில் பதான்

பாய்காட் சிக்கலில் பதான்

தீபிகாவுக்கு கேட்ட சம்பளம் கிடைத்ததால் தான், கவர்ச்சியும் தாராளமயக்கப்பட்டுள்ளதாம். இதனிடையே தீபிகாவின் கவர்ச்சி பாடல் ரசிகர்களிட நல்ல வரவேற்பைப் பெற்றாலும், அதுவே தற்போது பாய்காட் சிக்கலில் மாட்டியுள்ளது. தீபிகா அணிந்துள்ள பிகினி ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால், அதனை காரணம் காட்டி ஒரு அரசியல் கட்சி சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனை காரணம் காட்டி பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் 'பாய்காட் பதான்' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X