twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அட நிஜம் தான்...நம்புங்க...தீபிகா படுகோனை உணர்ச்சி வசப்பட வைக்கும் உணவு இது தான்

    |

    மும்பை : பாலிவுட்டின் டாப் நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் மட்டுமின்றி அமெரிக்க படங்களிலும் நடித்துள்ளார்.உலக அளவில் பிரபலமான நபர்களில் இவரும் ஒருவர்.

    தமிழில் ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் அனிமேஷன் வடிவில் நடித்தார் தீபிகா. இவர் சமீபத்தில் நடித்த Gehraiyaan படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

    தற்போது Cirkus, Pathaan, Project K, Jawan ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் தீபிகா தனது கிளாமர் போட்டோ ஷுட் போட்டோக்கள், கணவர் ரன்வீர் சிங்குடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் என அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பரபரப்பை கிளப்புவார்.

    ஜார்ஜ் குட்டி ரிட்டர்ன்ஸ்… திரிஷ்யம் 3ம் பாகத்துக்கு ரெடியான மோகன்லால்: அடிபொலி அப்டேட் இது! ஜார்ஜ் குட்டி ரிட்டர்ன்ஸ்… திரிஷ்யம் 3ம் பாகத்துக்கு ரெடியான மோகன்லால்: அடிபொலி அப்டேட் இது!

    தீபிகாவை உணர்ச்சிவசப்பட வைக்கும் உணவு

    தீபிகாவை உணர்ச்சிவசப்பட வைக்கும் உணவு

    இந்நிலையில் தற்போது அனிமேடட் வீடியோ ஒன்றை தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தன்னை உணர்ச்சிவசப்பட வைக்கும் அளவிலான ஃபேவரைட் உணவு பற்றி அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது.இதுவரை இந்த வீடியோவை 5.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

    காட்டு தீயாய் பரவும் வீடியோ

    காட்டு தீயாய் பரவும் வீடியோ

    ஏராளமானோர் அதிக அளவில் இந்த வீடியோவை ஷேர் செய்து வருவதுடன், தங்களை உணர்ச்சிவசப்பட வைக்கும் ஃபேவரைட் உணவு எது என்பது பற்றியும், அது பற்றிய தங்களின் உணர்வுகளையும் பகிர்ந்து வருகின்றனர். அதே சமயம் தீபிகாவின் ஃபேவரைட் உணவு இது தானா? இது நிஜம் தானா என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.

    அப்படி என்ன இருக்கும் அந்த வீடியோவில்

    அப்படி என்ன இருக்கும் அந்த வீடியோவில்

    இந்த அனிமேடட் வீடியோவில் உள்ள விஷயம் தான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதில், ஓட்டலுக்கு செல்லும் சிறுமி ஒருவர் வெளிநாட்டு உணவுகள் வைக்கப்படுவதை பார்த்து கவலையாக மெனு கார்டை பார்க்கிறாள். அதில் ரசம் சாதம் என்ற அயிட்டத்தை பார்த்து சந்தோஷமாகி அதை ஆர்டர் செய்து சாப்பிடுகிறாள். அதுவும் முதலில் ஸ்பூனில் எடுத்து சாப்பிடும் அந்த சிறுமி, பிறகு கைகளால் பிசைந்து வாயில் வைத்து சுவைத்ததும் அவரின் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது.இந்த வீடியோவை தான் தீபிகா பகிர்ந்துள்ளார்.

    இதுதான் தீபிகாவின் ஃபேவரைட் சாப்பாடா?

    இதுதான் தீபிகாவின் ஃபேவரைட் சாப்பாடா?

    அந்த வீடியோவுடன் ரசமும் சாதமும் தான் எமோஷன்...நிஜமாவே என குறிப்பிட்டுள்ளார்.இந்த ரசம் சாதம் வீடியோ தான் சோஷியல் மீடியாவில் பலரும் விழுந்து விழுந்து ரசித்து, ஷேர் செய்து வருகின்றனர். அது மட்டுமல்ல ரசம் சாதம் சாப்பிடும் போது தங்களுக்கு ஏற்படும் உணர்வுகளையும் ரசித்து ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

    English summary
    “Rasam & Rice is an Emotion…Truly!” Padukone shared and posted an animated video. She also tagged the illustrator who created the video. The video was posted a day ago and since being shared, the clip has gone viral. Till now, the video has accumulated more than 5.2 million views.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X