வாரத்துல 7 நாளும் வேலை பார்க்கணுமா?.. பொண்டாட்டியை பற்றி எப்படி தப்பா பேசலாம்.. தீபிகா படுகோன் கோபம்
மும்பை: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், முக்கியமான புள்ளிகளின் அபத்தமான பேச்சுகள், சில சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றார். சில மாதங்களுக்கு முன்னர்தான் இவருக்கு மகள் பிறந்தார். இவர் நடிகர் ரன்வீர் சிங்கினைத் திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையில் ஈடுபட்டு வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், தனது சினிமா கெரியர் மீதும் தனி கவனம் செலுத்தி வருகின்றார். இப்படியான நிலையில் இந்தியாவில் இருக்ககூடிய மிகவும் தொழிலதிபர்களில் மிகவும் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவர் எல் & டி நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.என் சுப்பிரமணியனின் கருத்துக்கு தனது கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
அதாவது நடிகை தீபிகா படுகோன், தற்போது பேன் இந்தியா நடிகையாக மாறிவிட்டார். இந்தி படங்களில் மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் உருவாகும் பான் இந்தியா படங்களில் நடிக்கவைக்க பல இயக்குநர்கள் தொடங்கி, பல்வேறு தயாரிப்பாளர்கள் வரை பலரது முதல் சாய்ஸாக இருப்பது நடிகை தீபிகா படுகோன் தான். கடந்த ஆண்டு ரிலீஸ் ஆன கல்கி 2898 கிபி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல், கடந்த வாரத்தில் பூஜை போடப்பட்ட எஸ்.எஸ். ராஜமௌலியின் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இது இல்லமால், பல்வேறு இந்திப் படங்களிலும் தீபிகா நடித்து வருகின்றார்.

தீபிகா எப்போதுமே மிகவும் தைரியமான நடிகையாக திகழ்ந்துள்ளார். தன் மீதான விமர்சனங்களோ அல்லது சமூகத்தில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகள் குறித்தோ, மேலும், அந்த நிகழ்வுகள் குறித்து யாராவது அபத்தமான கருத்தினைத் தெரிவித்தால், அதற்கு தனது பதிலடியைக் கொடுத்து வந்துள்ளார். தனது கருத்தை, விமர்சனத்தை முன் வைக்க தீபிகா படுகோன் ஒருபோதும் தயங்கியதில்லை.
7 நாளும் வேலை: அப்படியான நிலையில் இந்தியாவில் இருக்கும் மிகவும் முக்கியமான தொழிலதிபர்களில் ஒருவரான எல் & டி நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.என். சுப்பரமணியன் தெரித்துள்ள அபத்தமான கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது, “ ஒருவர் வாரத்தில் 90 மணி நேரம் வேலை செய்யவேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லையே என நான் மிகவும் வருத்தமடைகின்றேன். மேலும் எவ்வளவு நேரம்தான் நீங்களும் உங்கள் மனைவியையே பார்த்துக் கொண்டு இருப்பீர்கள்.
அபத்தம்: நான் வாரத்தின் எல்லா நாட்களிலும் வேலை செய்கின்றேன்” என கூறியிருந்தார். இவரது இந்த அபத்தமான கருத்து இணையத்தில் வேகமாக பரவியது. மேலும் இவரது கருத்து இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் உள்ளது. அதாவது, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் வேலை, வாரத்தில் ஒரு நாள் கட்டாயம் விடுமுறை என இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கூறுகின்றது.
திபிகா விமர்சனம்: இப்படியான நிலையில், எல் & டி நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.என். சுப்பரமணியனின் கருத்துக்கு தீபிகா படுகோன் மிகவும் காட்டமாக தனது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார். அதாவது, முக்கிய பதவிகளில் இருக்க கூடியவர்கள் இது போன்ற கருத்துக்களைச் சொல்வதைப் பார்க்கும்போது அதிர்ச்சியாக உள்ளது. எல்லாம் மனநிலை சார்ந்தது போல என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தீபிகா படுகோனின் இந்தப் பதிவு பலரது கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பலரும் தீபிகாவின் பதிவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











