நடிகை தீபிகா ஹோட்டல்களில் தங்கினால் 'எதை திருடுவார்' என்று தெரியுமா?
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஹோட்டல்களில் தங்கினால் எதை திருடுவார் என்று அவரின் தோழி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வரும் 4ம் தேதி ஃபிரெண்ட்ஷிப் டே கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் தோழிகள் அவரின் இணையதளத்தில் அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சினேகா ராம்சந்தர் என்பவர் தீபிகாவை பற்றி எழுதியுள்ளார்.

திருட்டு
சினேகா ராம்சந்தர் தனது நெருங்கிய தோழியான தீபிகாவின் குணங்களை ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து எழுதிவிட்டு கடைசி வரியில் குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அதாவது தீபிகா ஹோட்டல்களில் தங்கும்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் குட்டி ஷாம்பூ பாட்டில்களை சினேகாவுக்காக திருடுவாராம். இந்த தகவலை சினேகா வெளியிட்டுள்ளார். சினேகா எழுதியதை பார்த்து ரசிகர்கள் யாரும் தீபிகாவை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவர் தோழிக்காகத் தானே அப்படி செய்கிறார் என்று ஆதரவாக உள்ளனர்.

போதைப் பொருள்
முன்னதாக தீபிகா பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்டார். அந்த பார்ட்டியில் எடுத்த வீடியோவை கரண் ஜோஹார் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த சிரோமணி அகாலிதள கட்சி எம்.எல்.ஏ. மஜிந்தர் சிர்சா பிரபலங்கள் போதைப் பொருள் பயன்படுத்தியாக குற்றம் சாட்டியுள்ளார்.

தீபிகா
பார்ட்டியில் கலந்து கொண்ட தீபிகா உள்ளிட்ட பிரபலங்கள் தாங்கள் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்று சோதனை செய்து நிரூபிக்கத் தயாரா என்று சிர்சா கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பார்ட்டியில் தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் கலந்து கொள்ளவில்லை. ஆனால் முன்னாள் காதலரான ரன்பிர் கபூர் கலந்து கொண்டார். அதை வைத்தும் தீபிகாவை சமூக வலைதளங்களில் வேறு விதமாக விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்
தீபிகா மேக்னாவின் இயக்கத்தில் சாப்பக் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் மூலம் அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். சாப்பக் படத்தில் தீபிகா ஆசிட்வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலாக நடித்துள்ளார். மேலும் அவர் தனது கணவர் நடித்து வரும் 83 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். திருமணத்திற்கு பிறகு ரன்வீரும், தீபிகாவும் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











