எம்ஏஎம்ஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்த தீபிகா...காரணம் இது தானாம்

மும்பை : எம்ஏஎம்ஐ எனப்படும் மும்பை அகாடமி ஆஃப் மூவிங் இமேஜ் அமைப்பின் தலைவர் பதவியை நடிகை தீபிகா படுகோனே ராஜினாமா செய்துள்ளார். இந்த அமைப்பின் தலைவராக கடந்த 2 ஆண்டுகளாக பிரியங்கா தான் இருந்து வருகிறார். எம்ஏஎம்ஐ.,யில் இருந்து விலகும் தகவலை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்துள்ளார்.

அத்துடன் அவர் பதிவிட்டிருந்த பதிவில், எம்ஏஎம்ஐ.,யில் ஒரு உறப்பினராக இருந்து தலைவராக சேவையாற்றியது ஒரு ஆழமான, வளமான அனுபவம். ஒரு நடிகையாக அது எனக்கு மிகவும் ஊக்கமளித்துள்ளது. மும்பையில் உலக அளவிற்கு என திறமையை கொண்டு சென்றுள்ளது. அது எனக்கு இரண்டாவது வீடு.

கவனம் செலுத்த முடியவில்லை

கவனம் செலுத்த முடியவில்லை

வேலை தொடர்பாக கமிட்மென்ட்கள் அதிகமாக இருப்பதே எம்ஏஎம்ஐ.,யில் இருந்து நான் விலக காரணம். நிறைய படங்களில் கமிட் ஆகி இருப்பதால் என்னால் எம்ஏஎம்ஐ மீது கவனம் செலுத்த முடியவில்லை. அதனாலேயே தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.

எப்போதும் தொடர்பில் இருப்பேன்

எப்போதும் தொடர்பில் இருப்பேன்

மேலும், கவனம் மிகவும் முக்கியம். அதனால் தலைவர் பதவியில் இருந்து விலகுவதே சரியானதாக இருக்கும் என முடிவு செய்தேன். ஒரு சிறந்த, திறமையானவர்கரின் கையில் எம்ஏஎம்ஐ பொறுப்பு ஒப்படைக்கப்படும் என எனக்கு தெரியும். ஆனால் அந்த அமைப்புடனான எனது தொடர்பு எப்போதும் இருந்து கொண்டே இருக்கும் என்றார் தீபிகா படுகோனே.

தீபிகாவின் முடிவுக்கு பாராட்டு

தீபிகாவின் முடிவுக்கு பாராட்டு

தீபிகாவின் இந்த முடிவு வருத்தமளிப்பதாக பலர் கூறி இருந்தாலும், சிறப்பான, பொறுப்பான முடிவு என பாராட்டி உள்ளனர். தீபிகா தற்போது ஷாருக்கானுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும், பிரபாஸ் மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடிக்கும் ஒரு படம், பாலிவுட் ரீமேக் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

கைவசம் நிறைய படங்கள்

கைவசம் நிறைய படங்கள்

மும்பை திரைப்பட திருவிழா எம்ஏஎம்ஐ.,ஆல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இவ்விழா ரத்து செய்யப்பட்டது. தீபிகா தற்போது தான் ரன்வீர் சிங்குடன் 83 என்ற கபில்தேவின் வாழ்க்கை படத்தில் நடித்து முடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X