ஒரு நாளுக்கு ஒரு கோடி கேட்டு விஜய், சிம்புவை அதிர வைத்த தீபிகா
சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க இந்தி நடிகை தீபிகா படுகோனே கேட்ட சம்பளம் சம்பந்தப்பட்டவர்களை அதிர வைத்துள்ளதாம்.
விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துக் கொண்டே சிம்புதேவன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறதாம்.
இந்நிலையில் விஜய்க்கு ஜோடியை தேட துவங்கிவிட்டனர்.

தீபிகா படுகோனே
சிம்புதேவன் படத்தில் இளைய தளபதி விஜய் ஜோடியாக நடிக்குமாறு பாலிவுட்டின் முன்னணி நாயகியாக உள்ள தீபிகா படுகோனேவிடம் கேட்டார்களாம்.

பணம், பணம்
தீபிகாவோ கதை என்ன என்று கூட கேட்காமல் உங்கள் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி சம்பளம் வேண்டும். நான் எத்தனை நாட்கள் படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றாராம்.

அடியாத்தி
தீபிகா இப்படி ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம் கேட்டவுடன் படக்குழுவினர் அதிர்ந்து போய்விட்டார்களாம். கோச்சடையானில் வெறும் இரண்டு நாட்கள் வந்து நடித்ததற்கே ரூ.3 கோடி வாங்கினார் தீபிகா என்பது குறிப்பிடத்தக்கது.

கோச்சடையான்
கோச்சடையான் படம் முதலில் ரிலீஸாகட்டும். அதன் பிறகு தீபிகாவை ஒப்பந்தம் செய்வதா வேண்டாமா என்று தீர்மானிப்போம் என முடிவு செய்துள்ளார்களாம்.

தளபதி
தீபிகா கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் அவர் தளபதியை விட அதிக சம்பளம் வாங்கிவிடுவார் போன்று. ஏற்கனவே சம்பள விஷயத்தால் தான் தீபிகாவை கோடம்பாக்கத்தினர் சீண்டாமல் இருந்தனர். இந்நிலையில் அம்மணி மீண்டும் சம்பளத்தில் கறாராக உள்ளார்.


Click it and Unblock the Notifications











