இந்த நடிகர்தான் எனது உள்ளாடை..தீபிகா படுகோனே இப்படி சொல்லிட்டாரே..ரன்வீர் சிங் கேட்டால் என்ன ஆவாரோ?
மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் தீபிகா படுகோனே. அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. தமிழில் அவர் கோச்சடையான் படத்திலும் நடித்திருக்கிறார். அவர் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து சில வருடங்கள் முன்பு திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில்தான் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. சூழல் இப்படி இருக்க தீபிகா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே. தனது தந்தை விளையாட்டு வீரராக இருந்தாலும் தனக்கு சினிமாதான் சரி என்பதை முடிவு செய்து அதனையே தேர்ந்தெடுத்தார் தீபிகா. டென்மார்க்கில் பிறந்த அவர் 2006ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஐஸ்வர்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால் அந்தப் படம் அவர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் தீபிகா மனம் தளரவில்லை.

பாலிவுட்டில் என்ட்ரி: சூழல் இப்படி இருக்க அவரை பாலிவுட் உலகம் வரவேற்றது. அதன்படி 2007ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஓம் சாந்தி ஓம் படத்தின் மூலம் அங்கு அறிமுகமானார். ஹிந்தியில் அறிமுகமான முதல் படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக தோன்றியதால் பலரும் தீபிகாவை ஆச்சரியமாகவே பார்த்தார்கள். மேலும் அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து தீபிகாவின் கரியரை நல்லபடியாக பாலிவுட்டில் தொடக்கி வைத்தது.
தொடர் வாய்ப்புகள்: ஓம் சாந்தி ஓம் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்டு கிளாமராகவும், திறமையாகவும் நடித்து ஒட்டுமொத்த பாலிவுட்டினரையும் தன்னை திரும்பி பார்க்க வைத்தார். வருடத்திற்கு அதிகபட்சம் ஐந்து படங்கள்வரை நடித்திருக்கிறார் அவர். தமிழில்கூட கோச்சடையான் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தமிழில் அவரால் சோபிக்க முடியவில்லை. கடைசியாக கல்கி படத்தில் நடித்திருந்தார் அவர்.
திருமணம்: இதற்கிடையே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வந்த தீபிகா படுகோனே அவரையே சில வருடங்களுக்கு முன்பு திருமணமும் செய்துகொண்டார். அவர்களது திருமண வாழ்க்கை காதலோடும், அமைதியோடும் நகர்ந்துகொண்டிருக்கிறது. திருமணத்துக்கு பிறகு தீபிகா நடிப்பதற்கு ரன்வீர் எந்தவிதமான தடையையும் போடவில்லை. அந்தத் தம்பதிக்கு சமீபத்தில்தான் பெண் குழந்தை பிறந்தது. பலரும் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: சூழல் இப்படி இருக்க தீபிகா படுகோனே அளித்த பழைய பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. ரன்பீர் கபூருடன் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட அவர், 'ரன்பீர் கபூர்தான் என்னுடைய ப்ரோ மற்றும் உள்ளாடை. என்னுடைய எல்லாமே இவர்தான்’என ஓபனாக சொல்லியிருக்கிறார். முன்னதாக ரன்பீருடன் தீபிகா படுகோனே சில காலம் டேட் செய்ததாகவும்; ஆனால் அவர்களுக்குள் சரியான புரிதல் இல்லாததால் அந்த டேட்டிங் அடுத்தக்கட்டத்துக்கு செல்லவில்லை என்று சில வருடங்களுக்கு முன்பு தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது. ஆலியா பட்டை ரன்பீர் திருமணம் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











