குடும்பத்தினரை தொடர்ந்து தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி!
பெங்களுர் : பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
Recommended Video
தீபிகாவின் தந்தை, அவரது தாயார், இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தீபிகா மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

3,57,229 பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா ஜெட் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்திருக்கிறது.

3,449 உயிரிழப்பு
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 15 கோடியே 89 இலட்சத்து 32 ஆயிரத்து 921 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மருத்துவமனையில் அனுமதி
தீபிகா கடந்த ஒருமாதமாக பெங்களுரில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 10 நாட்களுகு முன்பு தீபிகாவின் தந்தை பிரகாஷ் மற்றும் தாயார் உஜ்ஜாலா, இளைய சகோதரி அனிஷா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இவர்கள் அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வீட்டில் தனிமையில் ஓய்வு
இதையடுத்து, தீபிகா மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் வீட்டில் தனிமையில் ஓய்வு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை தீபிகாவோ, ரன்வீரோ தங்களது சமூகவலைத்தளப்பக்கத்தில் உறுதிப்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications











