Deepika Padukone: ஷாருக்கானுக்காக வளைந்துகொடுக்கும் தீபிகா படுகோன்... காரணம் என்னன்னு தெரியுமா?
மும்பை: பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருபவர் தீபிகா படுகோன்.
ஜனவரி மாதம் வெளியான பதான் படத்தில் ஷாருக்கானுடன் பிகினியில் ஆட்டம் போட்டு ரசிகர்களை சூடேற்றினார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்கர் மேடையில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் குறித்தும் பேசியிருந்தார்.

இந்நிலையில், திருமணம் முடிந்த பிறகும் கூட, ஷாருக்கானின் படங்களில் மட்டும் தீபிகா படுகோனே கவர்ச்சியில் கலங்கடிப்பது ஏன் என்பது குறித்து தெரியவந்துள்ளது.
ஷாருக்கானுக்காக வளைந்து கொடுக்கும் தீபிகா படுகோன்
2006ம் ஆண்டு வெளியான ஐஸ்வர்யா என்ற கன்னட படத்தில் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அதன்பின்னர் இந்தி திரையுலகில் அடியெடுத்து வைத்த தீபிகா, இப்போது பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி வருகிறார். பாலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொண்ட தீபிகா, ஷாருக்கான் படம் என்றால் மட்டும் கவர்ச்சியில் வெளுத்து வாங்கிவிடுகிறார்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான பதான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 1000 ரூபாய் வசூலித்தது. ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் தீபிகா படுகோனே அவரது ஜோடியாக நடித்திருந்தார். முக்கியமாக பேஷ்ராம் என்ற பாடலில் காவி பிகினியில் ஹாட்டாக ஆட்டம் போட்டு ரசிகர்களை திணறடித்தார். ரன்வீர்சிங்கை திருமணம் செய்துகொண்ட பின்னரும் தீபிகாவின் இந்த கவர்ச்சி ஆட்டம் பாலிவுட்டையே பதற வைத்தது.
இதுகுறித்து பேசியிருந்த தீபிகா படுகோன், ஷாருக்கானுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன் எனக் கூறியிருந்தார். அதற்கு ஒரே காரணம், தீபிகாவை பாலிவுட்டில் அறிமுகப்படுத்தியது ஷாருக்கான் என்பது தான். இந்தியில் நடிக்க வாய்ப்புத் தேடிய தீபிகா படுகோனேவுக்கு அவ்வளவு எளிதாக சான்ஸ் கிடைக்கவில்லையாம். இதனால் ரொம்பவே நொந்து போயுள்ளார் தீபிகா படுகோனே.

சிறிய தயாரிப்பு நிறுவனம் முதல் பெரிய கம்பெனிகள் வரை ஏறி இறங்கிய தீபிகாவை ரொம்பவே அவமானப்படுத்தி விரட்டியுள்ளனர். தீபிகாவின் உயரமான உடல்வாகு, அவரது அழகு என எல்லாவிதத்திலும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இறுதியாக ஓம் சாந்தி ஓம் படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டார் தீபிகா, அப்போது தான் ஷாருக்கான் அவருக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளார்.
ஓம் சாந்தி ஓம் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, அதன்பிறகு தீபிகாவின் மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது. ஓம் சாந்தி ஓம் படத்திலும் தீபிகா படுகோனேவின் அறிமுகக் காட்சி, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருவதாகவே இருக்கும். அவரை ஷாருக்கான் தான் ஆடிஷன் வைத்து செலக்ட் செய்வார். ரியல் லைஃப், முதல் பாலிவுட் சினிமா இரண்டுமே தீபிகாவிற்கு ஒரே மாதிரியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கான் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானதால் தான் அவருக்காக எக்ஸ்ட்ராவாக வளைந்துகொடுத்துப் போகிறாராம் தீபிகா படுகோனே. பதான் படப்பிடிப்பிலும் கூட இருவரும் அதிக நெருக்கம் காட்டியதாக பாலிவுட்டில் புகைச்சல் கிளம்பியது. பதானைத் தொடர்ந்து ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் ஜவான் படத்திலும் தீபிகா படுகோனே நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications