ஷாருக்கானுடன் ஆக்ஷனில் தெறிக்க விடப் போகும் தீபிகா படுகோனே: மாஸ் அப்டேட் கொடுத்த பதான் டைரக்டர்
மும்பை: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனே 'பதான்' படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஜான் ஆப்ரஹாம் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
'பதான்' படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி, மாஸ் காட்டிய நிலையில், தற்போது தீபிகா படுகோனே கேரக்டர் குறித்து சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

பாலிவுட்டில் அறிமுகம்
'ஓம் சாந்தி ஓம்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து, இந்தி திரையுலகில் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. முதல் படத்திலேயே ரசிகர்களின் தூக்கத்தை களவாடிய தீபிகா படுகோனே, குறுகிய காலத்தில் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட்டார். ஆக்டிங், டான்ஸ், ரொமான்ஸ் என தீபிகாவின் நடிப்பையும் அவரது அழகையும் கண்டு சொக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஹாலிவுட் என்ட்ரி
இந்தி டாப் ஸ்டார்கள் அனைவருடனும் ஜோடி போட்டு ரவுண்டு கட்டிய தீபிகா படுகோனே, 'XXX: Return of Xander Cage' படம் மூலம் ஹாலிவுட்டிலும் கெத்து காட்டினார். தொடர்ந்து இந்திப் படங்களில் மட்டுமே பிஸியாக நடித்து வந்தாலும், தீபிகா படுகோனேவுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அவரது படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

ஷாருக்கானுடன் தொடரும் கூட்டணி
'ஓம் சாந்தி ஓம்' படத்திற்குப் பிறகு 'சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஹேப்பி நியூ இயர்' ஆகிய படங்களில், ஷாருக்கான் - தீபிகா படுகோனே ஒன்றாக நடித்திருந்தனர். இந்தப் படங்களும் சூப்பர் ஹிட்டடிக்க, அடுத்ததாக 'பதான்' படத்திலும் இணைந்துள்ளனர். சித்தார்த் ஆனந்த் இயக்கும் இப்படத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோனே இருவருடன் ஜான் ஆப்ரஹாம் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

மிரட்டும் மோஷன் போஸ்டர்
'பதான்' திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துவிட்ட படக்குழு, அதற்காக தரமான மோஷன் போஸ்டரையும் வெளியிட்டது. இந்நிலையில், தற்போது தீபிகா படுகோனேவின் மோஷன் போஸ்டரும் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதில், கையில் துப்பாக்கியுடன் தீபிகா படுகோனே மிரட்டலான லுக்கில் தோன்றுவது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ரியல் பான் இந்தியா ஸ்டார்
இதனிடையே, தீபிகா படுகோனே குறித்து பேசியுள்ள 'பதான்' படத்தின் சித்தார்த் ஆனந்த். "தீபிகா படுகோனே தான் ரியல் பான் இந்தியா ஸ்டார்' என புகழ்ந்துள்ளார். மேலும், "பதான் படத்தில் தீபிகாவின் கேரக்டர் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் செம்ம மிரட்டலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தீபிகாவைப் போல இன்னொரு நடிகையைப் பார்க்க முடியாது" எனவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











