திரெளபதியாக மட்டுமல்ல.. ராதையாகவும் நடிக்கப் போகும் தீபிகா படுகோனே.. கிருஷ்ணன் யார் தெரியுமா?
மும்பை: இம்தியாஸ் அலியின் கனவு திரைப்படமான ராதா கிருஷ்ணன் படத்தில் ராதையாக தீபிகா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஜனவரி 10ம் தேதி தீபிகா படுகோனே நடிப்பில் வெளியான சபாக் திரைப்படம், பாலிவுட்டில் பாராட்டுக்களை பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மது மந்தேனா தயாரிப்பில் உருவாகவுள்ள மகாபாரதம் திரைப்படத்தில் திரெளபதியாக தீபிகா படுகோனே நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இம்தியாஸ் அலியின் ராதா கிருஷ்ணா படத்தில் ராதையாகவும் தீபிகா நடிக்க உள்ளாராம்.

செம்ம போல்டு
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தீபிகா படுகோனே, போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அசத்துவதில் வல்லவர். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவத் படத்தில் தனது சிறப்பான நடிப்பால் மிரட்டி இருந்தார். அந்த படத்தில் நடித்ததற்காக தீபிகாவுக்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும் அவர் அசரவில்லை.

சிங்கப் பெண்
ஜே.என்.யூ பல்கலைக் கழகத்தில் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு, எதிராக களம் இறங்கினார் தீபிகா படுகோனே. அடிபட்ட மாணவர்களை சந்தித்து, அவர்களுக்கு ஆதரவு கொடுத்த தீபிகா படுகோனேவிற்கு பல வித எதிர்ப்புகள் மற்றும் மிரட்டல்கள் எழுந்தன. பாலிவுட்டின் உச்ச நடிகர்கள் மெளனிகளாக இருந்த நிலையில், சிங்கப் பெண்ணாக தீபிகா கெத்து காட்டினார்.

ஆசிட் வீச்சு
ஆசிட் வீச்சு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி அகர்வாலின் கதையை மையமாக வைத்து சபாக் எனும் படத்தை எடுத்து தயாரித்து நடித்தவர் தீபிகா படுகோனே. மேக்னா குல்சர் இயக்கத்தில் விக்ராந்த் மசாய் உடன் இணைந்து நடித்த தீபிகா படுகோனேவுக்கு பாலிவுட் ரசிகர்களிடையே பாராட்டுக்கள் குவிந்தன.
Recommended Video

திரெளபதி
இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதத்தை படமாக்கும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மது மந்தேனா பிரம்மாண்ட முறையில் மகாபாரதத்தை உருவாக்கப் போவதாகவும், கிருஷ்ணராக ரித்திக் ரோஷனும், திரெளபதியாக தீபிகாவும் நடிப்பார்கள் என அறிவித்துள்ளார்.

ராதா கிருஷ்ணா
இந்நிலையில், பாலிவுட்டின் பிரபல இயக்குநர் இம்தியாஸ் அலி, தனது கனவு திரைப்படமான ராதா கிருஷ்ணா கதையை படமாக எடுக்க முன் வந்துள்ளார். கார்த்திக் ஆர்யானை கிருஷ்ணராகவும், தீபிகா படுகோனேவை ராதையாகவும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.

லவ் ஆஜ் கல்
இம்தியாஸ் அலி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யான், சாரா அலி கான், ரந்தீப் ஹூடா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள Love Aaj Kal திரைப்படம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தின கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகிறது. லவ் ஆஜ் கல் படத்தைத் தொடர்ந்து தனது கனவு திரைப்படத்தை இயக்க இம்தியாஸ் அலி முயன்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











