அட்லீ- அல்லு அர்ஜூன் படத்தில் தீபிகா? இதுவரை இல்லாத கதாபாத்திரம்.. அப்டேட் கொடுத்த இயக்குநர்!
சென்னை: கோலிவுட்டில் விஜய்யை வைத்து வரிசையாக படங்களை இயக்கிய அட்லீ. பீஸ்ட் படத்திற்கு பிறகு ஹிந்திக்கு சென்று ஜவான் படத்தி இயக்கினார். ஜவான் படம் தமிழில் பெரிதாக எடுபடவில்லை என்றாலும், இந்தியில் நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தை தொடர்ந்து, அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக AA22XA6 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தில் தீபிகா படுகோன் இணைந்திருப்பது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, AA22XA6- திரைப்படம் சமீப காலங்களில் அதிகம் பேசப்படும் படங்களில் ஒன்றாக மாற்றியது. அட்லீயின் இதுவரை இல்லாத மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் அட்லீ : 'ஜவான்' படத்தின் மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த இயக்குநரின் படத்தில், மீண்டும் தீபிகா படுகோனுடன் இணைந்துள்ளார். இது அவர்கள் இருவரும் இணையும் இரண்டாவது படமாகும். அண்மையில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், இப்படம் குறித்து பேசி அட்லீ, தீபிகா படுகோனை பற்றிப் புகழ்ந்து பேசி, அவர் தனது "அதிர்ஷ்ட தேவதை" என்று கூறியுள்ளார். ஆமாம், அவர்தான் என் அதிர்ஷ்ட தேவதை, இது தீபிகாவுடன் நான் இணையும் இரண்டாவது படம், அவருடன் பணியாற்றுவது ஒரு அற்புதமான அனுபவம். இந்தத் திரைப்படத்தில் தீபிகா படுகோனே முற்றிலும் புதிய பக்கத்தை ரசிகர்கள் காண்பார்கள் என்று அட்லீ கூறியுள்ளார்.. அட்லியின் இந்த பதில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
என் தேவதை: தீபிகா குழந்தை பிறந்த பிறகு நடிக்கும் முதல் இது தான். இது இந்த கூட்டணியை இன்னும் சிறப்பானதாக ஆக்கி உள்ளது. AA22XA6 படம் பற்றி விவரங்கள் இன்னும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், அட்லீயின் பிளாக்பஸ்டர் உருவாக்கும் திறனும் தீபிகா படுகோனின் நட்சத்திர அந்தஸ்தும் படத்தின் மிதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. மேலும், தீபிகா படுகோன் நடித்த கிங் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் அவர் ஷாருக்கான் உடன் மீண்டும் இணைகிறார்.


Click it and Unblock the Notifications











