»   »  அரை நிர்வாண போட்டோ: தீபிகா மீது கொலவெறியில் பிரபல இயக்குனர்

அரை நிர்வாண போட்டோ: தீபிகா மீது கொலவெறியில் பிரபல இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பத்திரிகைக்கு அரை குறை ஆடையில் போஸ் கொடுத்த நடிகை தீபிகா மீது இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கொலவெறியில் உள்ளாராம்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பத்மாவதி படத்தில் ராணியாக நடித்து வருகிறார். ஏற்கனவே பத்மாவதி படத்தில் நிஜ ராணியை அசிங்கப்படுத்துவதாகக் கூறி சில அமைப்பினர் செட்டை நாசப்படுத்தியதுடன், பன்சாலியையும் தாக்கினர்.

Deepika Padukone upsets Bhansali

இந்த காரணத்தினாலேயே படத்தில் அலாவுத்தீன் கில்ஜியாக நடிக்கும் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து எங்கும் ஊர் சுற்றக் கூடாது என்று பன்சாலி தீபிகாவுக்கு உத்தரவிட்டார். ரன்வீர் சிங் தீபிகாவின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தீபிகா பத்திரிகை ஒன்றுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்து ஆளாளுக்கு தீபிகாவை கேவலமாக திட்டி வருகிறார்கள்.

இதை பார்த்து பன்சாலி தீபிகா மீது செம கோபத்தில் உள்ளாராம். இருக்கிற பிரச்சனை போதாது என்று இது வேறயா என்று தீபிகா மீது கடுப்பில் உள்ளாராம் பன்சாலி.

English summary
Padmavati director Sanjay Leela Bhansali is reportedly angry with Deepika Padukone for her bold photoshoot for a leading magazine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil