நயன்தாரா மட்டுமில்ல.. இன்னைக்கு தீபிகா படுகோனும் திருப்பதிக்கு போயிருக்காங்க.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: திருமணத்தை நேற்று முடித்து விட்டு இன்று கணவர் விக்னேஷ் சிவன் உடன் திருப்பதியில் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார்.
நயன்தாரா மட்டுமின்றி பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனும் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. தீபிகா படுகோன் ஏன் இன்று திருப்பதிக்கு திடீரென சாமி தரிசனம் செய்தார் என்பதை இங்கே பார்ப்போம்..

திருப்பதியில் நயன்தாரா
ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் இனிதே நடைபெற்று முடிந்த நிலையில், ஜூன் 10ம் தேதியான இன்று தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்தார். மஞ்சள் நிற சேலை அணிந்து நயன்தாரா சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.

திருப்பதிக்கு வந்த தீபிகா படுகோன்
நடிகை நயன்தாரா மட்டுமின்றி இன்று பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். திருப்பதியில் அவர் மாஸ்க் அணிந்து சாமி தரிசனம் மேற்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. ஆனால், கணவர் ரன்வீ சிங் உடன் வரவில்லை.

என்ன விஷயம்
திடீரென நடிகை தீபிகா படுகோன் இன்று திருப்பதிக்கு வர என்ன காரணம் என விசாரித்துப் பார்த்தால், அவரது அப்பா பிரகாஷ் படுகோனின் பிறந்தநாளை கொண்டாடத்தான் அப்பாவுடன் திருப்பதிக்கு விசிட் அடித்துள்ளாராம் நடிகை தீபிகா படுகோன். வெள்ளை நிற சுடிதார் அணிந்து வந்த தீபிகா படுகோன் திருப்பதி ஏழுமலையானை சந்திக்க மேலே பட்டு சால்வையை போர்த்திக் கொண்டு தரிசனம் செய்துள்ளார்.

சர்வ ஏகாதசி
நயன்தாரா, தீபிகா படுகோன் மட்டுமின்றி மேலும், பல பிரபலங்களும் இன்று திருப்பதி திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். பெருமாளுக்கு மிகவும் உகந்த சர்வ ஏகாதசி தினம் என்பதால் மிகவும் விசேஷமாக இந்த நாள் பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாராவின் திருமணம் திருப்பதியில் நடைபெறவில்லை என்றாலும், சர்வ ஏகாதசி தினத்தன்று ஏழுமலையானை வழிபடும் யோகம் கிடைத்திருக்கிறது.

ரன்வீர் சிங் வரவில்லை
படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால் நடிகர் ரன்வீர் சிங் திருப்பதிக்கு தனது மனைவியுடன் வரவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. பியர்ல் கிரில்ஸ் உடன் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் எல்லாம் செய்த சாக நிகழ்ச்சியை போல ரன்வீர் சிங்கும் ஒரு டிஸ்கவரி சாகசத்துக்காக தயாராகி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேன்ஸ் ஜூரி
முன்னதாக பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற 70வது கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராக நடிகை தீபிகா படுகோன் கலந்து கொண்டார். தினமும் ரெட்கார்ப்பெட்டில் நடப்பதற்காகவே புதிய புதிய ஃபேஷன் உடைகளை அணிந்து கொண்டு உலக சினிமா ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தார் தீபிகா படுகோன்.
Recommended Video

பிரபாஸ் படம்
கீர்த்தி சுரேஷின் நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார் தீபிகா படுகோன். ஷாருக்கானின் பதான் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து முடித்துள்ளார். அடுத்த ஆண்டு பதான் படம் வெளியாக காத்திருக்கிறது. ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ராவை போலவே பெரிய படங்களின் மீது தீபிகா படுகோனின் பார்வையும் விழுந்த வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











