தர்மேந்திரா குடும்பத்தில் விரைவிலேயே டும் டும் டும்.. திபிகா படுகோன் தங்கச்சிக்கு வசதியான மாப்பிள்ளை

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் குடும்பத்தில் திருமண கொண்டாட்டம் களைகட்டவுள்ளது. அதாவது தீபிகா படுகோனின் சகோதரி அனிஷா படுகோனுக் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். பாலிவுட் வட்டாரங்களில் இது குறித்த பரபரப்பான தகவல்கள் உலா வருகின்றன.

அனிஷா படுகோனேவின் திருமணம், சமீபத்தில் மறைந்த பாலிவுட் ஜாம்பவான் தர்மேந்திராவின் குடும்ப உறுப்பினருடன் நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் படுகோன் குடும்பமும், தர்மேந்திரா குடும்பமும் உறவினர்களாக மாறவுள்ளனர். சமீபத்தில் தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் தர்மேந்திராவின் வீட்டிற்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்தது, இந்த உறவை மேலும் உறுதிப்படுத்தியதாகப் பலரும் கருதுகின்றனர். அனிஷா படுகோனேவின் திருமணம் தர்மேந்திரா குடும்பத்தைச் சேர்ந்த ரோஹன் ஆச்சார்யாவுடன் நடைபெறவுள்ளதாகக் கூறப்பட்டாலும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

தீபிகாவின் சகோதரி அனிஷா திருமணம் செய்யவுள்ள ரோஹன் ஆச்சார்யா யார் தெரியுமா? அனிஷா படுகோனே பெங்களூருவில் தனது தந்தை பிரகாஷ் படுகோன் (பேட்மிண்டன் ஜாம்பவான்) மற்றும் தாய் உஜ்வாலா படுகோனேவுடன் வசித்து வருகிறார். அனிஷா, தனது தீபிகா படுகோனைப் போலவே பிரபலமானவர். அவர் ஒரு கோல்ஃப் வீரர். மேலும், தீபிகா தொடங்கிய 'லிவ் லவ் லாஃப்’ தொண்டு நிறுவனத்தையும் கவனித்து வருகிறார்.

Deepika Padukone s Sister Anisha Padukone To Marry Rohan Acharya Who is Dharmendra Family Member

தர்மேந்திரா குடும்பம்: அனிஷாவை மணக்கவுள்ள ரோஹன் ஆச்சார்யா துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். அவர் தனது தந்தை சுமித் ஆச்சார்யாவுடன் இணைந்து பிசினஸ் செய்து வருகிறார். ரோஹனின் தாத்தா பிமல் ராய், இந்திய சினிமாவின் பிரபலமான இயக்குநராகத் திகழ்ந்தவர். இவருடன் அனிஷா படுகோனேவின் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹன் ஆச்சார்யாவின் சகோதரி திஷா ஆச்சார்யா, பாலிவுட் ஜாம்பவான் தர்மேந்திராவின் மகன் சன்னி தியோலின் மூத்த மகன் கரண் தியோலைத் திருமணம் செய்தவர். இதனால், தர்மேந்திரா, சன்னி தியோல் மற்றும் தீபிகா படுகோனே குடும்பங்கள் உறவினர்களாகின்றன.

ரன்வீர் சிங்: ரன்வீர் சிங்கின் பெற்றோருக்கும், ரோஹன் ஆச்சார்யாவின் பெற்றோரான சுமித் ஆச்சார்யாவுக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது. அனிஷாவும் ரோஹனும் பல நிகழ்ச்சிகளில் சந்தித்து அறிமுகமாகியுள்ளனர். இந்தத் திருமண நடத்த ரன்வீர் சிங்கின் பங்கு பெரியது என்று நெருங்கிய வட்டாரங்கள் டெக்கன் குரோனிக்கல் நாளிதழுக்குத் தெரிவித்துள்ளன. எனவே, விரைவில் இந்தத் திருமண செய்தி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X