ரன்வீரின் 83.. கபில் தேவ் மனைவி ரோமியாக தீபிகா..டிரெண்டாகும் புகைப்படம் !

சென்னை : கபில் தேவ்வின் மனைவி ரோமி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தீபிகா படுகோனே.

Recommended Video

மேடையை அதிரவைத்த ஜீவா ரன்வீர் | 83 First Look | RanveerSingh Speech

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தான் ரன்வீர் சிங். இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் தன் வித்தியாசமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இவர் பிரபல இந்தி நடிகை தீபிகா படுகொனின் கணவர். இருவரும் இந்தி திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபலங்களில் ஒருவர்.

Deepika plays Kapil Devs wife Romi Dev role in 83

இவர் நடித்தது என்னமோ பத்து வருடங்கள் தான். ஆனால் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் செய்யும் வசூல் சாதனையை இவர் படங்களும் செய்கின்றன மற்றும் குறுகிய காலத்தில் பல வெற்றிப்படங்கள் கொடுத்த நடிகர் என்ற பெயரும் இவரும் உண்டு.

யாஷ் ராஜ் பிலிம்ஸ் நடத்திய நடிகர்களுக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு அதில் தேர்வானார். அவர் நடித்த முதல் திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார்.

இவர் நடித்து உலகம் முழுவதும் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படங்கள் பாஜிராவ் மஸ்தானி மற்றும் பத்மாவத். இந்த இரு படங்கள் இவருக்கு ஒரு மாஸ் நடிகருக்கான அங்கீகாரத்தை பெற்று தந்தது. இவர் பிலிம்பேர் விருதை மூன்று முறை பெற்றுள்ளார்.

Deepika plays Kapil Devs wife Romi Dev role in 83

தற்போது 1983 ஆம் ஆண்டு நம் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்று உலகக்கோப்பை கைபற்றியது அதனை மையமாக வைத்து படத்தை எடுத்து வருகின்றனர். அதில் ரன்வீர் சிங் அப்போது இருந்த கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். தமிழ் நடிகர் ஜீவா கிரிக்கெட் வீரர் ஸ்ரீ காந்த் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சென்னையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதில் தீபிகா நடிக்கிறார் ஆனால் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி எழுந்த பல நாட்களாக பேசப்பட்டது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது,

கபில் தேவின் மனைவியான ரோமி தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தீபிகா என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா ரோமி தேவ் தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தில் ரன்வீரை பார்க்கும் பொழுது கபில் தேவ் போலவே உள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது அவரது மனைவி தீபிகாவும் கபில் தேவின் மனைவி போல உள்ளார் என்பது தெரிந்து பலரும் ஆச்சரியமடைந்து உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X