»   »  அடப்பாவமே, நடிகையின் இந்த காதலும் முறிந்துவிட்டதா?

அடப்பாவமே, நடிகையின் இந்த காதலும் முறிந்துவிட்டதா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவரது காதலர் ரன்வீர் சிங் இடையே பிரச்சனையாம். இந்நிலையில் ரன்வீர் சிங் தீபிகா இல்லாமல் தனியாக சுவிட்சர்லாந்து சென்றுள்ளார்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். தீபிகா ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றதில் இருந்தே காதலர்களுக்கு இடையே பிரச்சனையாம்.

இந்நிலையில் தீபிகாவுக்கும், ஹாலிவுட் நடிகர் வின் டீஸலுக்கும் இடையேயான நெருக்கம் ரன்வீருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.

தீபிகா

தீபிகா

தீபிகா வேறு வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் வின் டீஸலுடன் கனவில் குடும்பம் நடத்தி குழந்தைகள் பெற்றுவிட்டதாக பேட்டி அளிக்க ரன்வீர் சிங்கிற்கு காதில் புகை வராத குறையாம்.

பார்ட்டி

பார்ட்டி

அண்மையில் பாலிவுட் பிரபலம் ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு ரன்வீரும், தீபிகாவும் தனித்தனியாக வந்துள்ளனர். பார்ட்டியில் ரன்வீர் நடிகை கத்ரீனா கைஃபுடன் இருந்துவிட்டு அவருடனேயே கிளம்பிச் சென்றுவிட்டார்.

காதல் முறிவு

காதல் முறிவு

தீபிகாவிடம் காதல் பற்றி கேட்டதற்கு என்னது, காதலா என்று வித்தியாசமாக பேசினார். ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் பிரிந்து விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ரன்வீர்

ரன்வீர்

ரன்வீர் சிங் விடுமுறையை கழிக்க சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். அவருடன் தீபிகா செல்லவில்லை. இதனால் அவர்களின் காதல் முறிவு கன்பர்ம் என்கிறது பாலிவுட் வட்டாரங்கள்.

English summary
Buzz is that Bollywood love birds actress Deepika Padukone and actor Ranveer Singh are no longer together.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil