சொல்லி வைத்த மாதிரி ஒரே பதில்.. தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா, ரகுல் பிரீத்துக்கு மீண்டும் சம்மன்?
மும்பை: போதைப் பொருள் வழக்கில் விசாரணைக்கு சென்ற நடிகைகள், ஒரே பதிலை, சொல்லி வைத்தமாதிரி கூறியதால் அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து அவர் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார்.
பண மோசடி குறித்து அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

வாட்ஸ்-அப் உரையாடல்
அப்போது நடிகை ரியா சக்கரவர்த்தியின் வாட்ஸ்-அப் உரையாடல்களை ஆய்வு செய்த போது, அவருக்கும் போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தனது தம்பி சோவிக் மூலம் ரியா, போதைப்பொருளை வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிற்கு கொடுத்துள்ளார்.

ரியா கைது
இதையடுத்து ரியா, அவர் சகோதரர் சோவிக், சாமுவேல் மிரண்டா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த சிலருக்கும் போதைப் பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

சாரா அலி கான்
நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோன், ஷரத்தா கபூர், சாரா அலி கான் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்களுக்குச் சம்மன் அனுப்பினர். அதன்படி நடிகைகள் ரகுல் பிரீத் சிங்கிடம் சுமார் 4 மணி நேரமும் தீபிகா படுகோனிடம் 5 மணி நேரமும் விசாரணை நடத்தப்பட்டது.

ஒப்புக் கொண்டார் தீபிகா
ஷ்ரத்தா கபூர், சாரா அலிகான் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் தாங்கள் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளனர். இதற்கிடையே, விசாரணைக்கு வந்த தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா அலிகான், ரகுல் பிரீத் சிங் ஆகியோரின் செல்போன்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைக்காக பறிமுதல் செய்துள்ளனர்.
Recommended Video

மீண்டும் சம்மன்
இவர்கள் அனைவரும் விசாரணையில் சொல்லி வைத்த மாதிரி ஒன்று போலவே பதில் அளித்துள்ளனர். இதனால், அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நடிகை ரியா சக்கவர்த்தியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை நடக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications











