அதுக்குச் சரிபட்டு வருவாரா..? அனுஷ்காவின் மெகா ஹிட் படமான 'அருந்ததி' ரீமேக்கில் இந்த ஹீரோயினா?

By

சென்னை: அனுஷ்கா நடித்து மெகா ஹிட்டான அருந்ததி படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனுஷ்கா, சோனு சூட், அஞ்சன் பஜ்வா, சாயாஜி ஷிண்டே, பானுசந்தர் உட்பட பலர் நடித்த தெலுங்கு படம், அருந்ததி.

கோடி ராமகிருஷ்ணா இயக்கி இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

டிரெண்ட் செட்டர்

டிரெண்ட் செட்டர்

தமிழ், மலையாளத்திலும் அதே பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. வேறு சில மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. தெலுங்கை போலவே தமிழிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பேய்ப்படங்களின் வரிசையில் இந்த படம் டிரெண்ட் செட்டராக அமைந்தது. பேய் கதை ஒன்றில், வரலாற்றுப் பின்னணியை புகுத்தி எல்லோரும் ரசிக்கும்படி இதன் கதையை உருவாக்கி இருந்தனர்.

சினிமா வாய்ப்புகள்

சினிமா வாய்ப்புகள்

அருந்ததி கேரக்டரில் அசத்தி இருந்தார் அனுஷ்கா. இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கு அதிக புகழ் கிடைத்தது. அதிகமான வாய்ப்புகளும் கிடைத்தன. தென்னிந்திய சினிமாவில் அவருக்கு வேறொரு இமேஜை கொடுத்த படம் இது. தெலுங்கில், ஹீரோக்களை மையப்படுத்தி படங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான படம் இது.

இந்தி ரீமேக்

இந்தி ரீமேக்

இந்தப் படம், வசூலில் பல ரெக்கார்ட்களை பிரேக் செய்தது தெலுங்கில். தமிழிலும் வசூல் சாதனைப் படைத்தது. இந்தப் படத்தின் அடுத்த பாகம் எடுக்கப்படுவது பற்றி கடந்த சில வருடங்களாகத் தகவல் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கிடையே, இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. அல்லு அரவிந்த் இந்தப் படத்தை இந்தியில் தயாரிக்க இருக்கிறார் என்கிறார்கள்.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

இதில் நடிகை தீபிகா படுகோன், அருந்ததி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், அனுஷ்கா கேரக்டரை தீபிகா படுகோன் மட்டுமே இந்தியில் சிறப்பாக செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறாராம். அவர் நடித்தால், இதுவரை ஹாரார் கதை பின்னணியில் நடித்திராத அவருக்கு பெரும் சவாலாக இருக்கும் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X