'நடிகையர் திலகம்' இயக்குனரின் சயின்ஸ்பிக்சன் படத்தில்.. பிரபாஸ் ஜோடி இந்த பாலிவுட் ஹீரோயின்தானாம்!

By

சென்னை: பிரபாஸ் நடிக்கும் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தில் அவர் ஜோடியாக பிரபல இந்தி நடிகை நடிப்பதாக மீண்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

பிரபாஸை மிரட்டப்போகும் அரவிந்த்சாமி.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

'பாகுபலி' மூலம் தேசிய அளவில் கவனம் பெற்றவர், தெலுங்கு ஹீரோ பிரபாஸ். இதை தொடர்ந்து மெகா பட்ஜெட் படமான 'சாஹோ'வில் நடித்தார்.

இதில் ஸ்ரத்தா கபூர், ஜாக்கி ஷெராப், அருண் விஜய் உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியானது.

லாக்டவுன்

லாக்டவுன்

ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது கே கே ராதாகிருஷ்ணா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில், பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்தபோதுதான் லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

சயின்ஸ் பிக்சன்

சயின்ஸ் பிக்சன்

இதையடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் அவர் நடிக்கிறார். இந்தப் படம் சயின்ஸ் பிக்சன் படம் என்று கூறப்படுகிறது. மூன்றாம் உலகப் போரை மையமாக வைத்து இதன் கதை உருவாக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

மூன்று மொழிகளில்

மூன்று மொழிகளில்

இதை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கிறது. தெலுங்கு சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனம் இது. இந்தப் படமும் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. இதனால், இந்தி நடிகை ஒருவரை ஹீரோயினாக நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இதுவரை தெலுங்கு சினிமாவில் நடிக்க ஒரு ஹீரோயினை தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், அப்போது இதை படக்குழு மறுத்தது. ஆனால், அவர்தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்று இப்போது மீண்டும் செய்தி வெளியாகியுள்ளது. இதுபற்றி லாக்டவுனுக்குப் பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X