தீபிகா படுகோனேவை அடிக்க முட்டை, தக்காளியுடன் காத்திருந்த போராட்டக்காரர்கள்
அகமதாபாத்: அகமதாபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற நடிகை தீபிகாவுக்கு பேரதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் நடித்துள்ள ராம் லீலா படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் சில காட்சிகள் இந்து மதத்தினர் மனதை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ஹீரோ ரன்வீர் சிங், ஹீரோயின் தீபிகா படுகோனே உள்ளிட்டோர் மீது புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள தீபிகா அகமதாபாத் சென்றார்.

முட்டை, தக்காளி
ராம் லீலா படத்தை கண்டித்து தீபிகா மீது எறிய முட்டை, தக்காளியுடன் ஜடேஜா மற்றும் ராபரி சமூகத்தினர் தயாராக இருந்தனர்.

ஜஸ்ட் மிஸ்ஸான தீபிகா
அதற்குள் ராம் லீலா படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க பன்சாலி ஒப்புக் கொண்டதாகவும், இது தொடர்பாக சமூக தலைவர்களிடம் பேசிவிட்டதாகவும் போராட்டக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் தீபிகாவை தாக்காமல் சென்றனர்.

ஒன்னுமே நடக்காதது போல்
முட்டை, தக்காளியில் அடிவாங்கவிருந்த தீபிகா ஒன்றுமே நடக்காதது போன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

காதல்?
தீபிகாவும், ரன்வீர் சிங்கும் காதலிப்பதாக பாலிவுட்டில் பேச்சாகக் கிடக்கிறது. இந்நிலையில் தான் காதலில் விழுந்துள்ளதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











