என்னுடைய மீசையை தீபிகா ஷேவ் செய்வார்.. ரன்வீர் சிங்
சஞ்சய் லீலா பன்சாலியின் ராம்லீலா டிரெய்லர் எடுத்த எடுப்பிலேயே சூடு கிளப்ப ஆரம்பித்துள்ளது. டிரெய்லர் வெளியீட்டின் போது நாயகி தீபிகா படுகோனை, நாயகன் ரன்வீர் சிங் கலாய்க்க, பதிலுக்கு அவர் டிப்ளமேட்டிக்காக பதிலளிக்க விழாவே கலகலப்பாகி விட்டது.
பன்சாலியின் ராம்லீலாவுக்கு பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க, ஜோடி போட்டுள்ளார் தீபிகா.
இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரிதான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது.

மேடையில் வைத்துக் கலாய்த்த ரன்வீர்
ராம்லீலா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவின்போது தீபிகாவை ஏகத்திற்கும் கலாய்த்தார் ரன்வீர்.

கன் வேண்டாம், கோலி வேண்டாம்... சோளி போதும்
நிகழ்ச்சியின்போது தீபிகா கையில் பிஸ்டல் வைத்திருப்பது போன்ற போஸ்டரை வைத்து கிண்டலடித்தார். அப்போது அவர் சொல்கையில், எனக்கு கன் வேண்டாம், கோலி வேண்டாம்.. சோளி போதும் என்றார்.

ஆசையாய் வளர்த்த மீசை
இப்படத்தில் நீண்ட மீசையுடன் வருகிறார் ரன்வீர். அதுகுறித்து அவர் கூறுகையில் இப்படத்திற்காக ஒரு வருடமாக மீசை வளர்த்து வருகிறேன். தினசரி இரவு எண்ணெய் தேய்ப்பேன். பராமரிக்கவே ரொம்பக் கஷ்டப்பட்டேன்

தீபிகா ஷேவ் செய்வார்
இருந்தாலும் பரவாயில்லை. இப்போது இதை ஷேவ் செய்யப் போகிறேன். அதைச் செய்யப் போவது... தீபிகா என்று கூறி அவர் நிறுத்த அரங்கமே அதிர்ந்தது. தீபிகாவோ நெளிந்தார்.

நவம்பர் 15ல் ரிலீஸ்
ராம்லீலா நவம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறதாம்.


Click it and Unblock the Notifications











