எது வந்தாலும் டிய்யாலோ டிய்யாலோ தான் … மீண்டும் சேருமா வெற்றிக்கூட்டணி?

சென்னை : 2014ல் வெளிவந்த படமான கயல் படத்தின் இறுதி பாடல் தான் டிய்யாலோ டிய்யாலோ பாடல் ,பிரபு சாலமன் மற்றும் இசையமைப்பாளர் டி.இம்மான் கூட்டணியில் உருவான மூன்றாவது படம் தான் கயல் .கிருஸ்துமஸ் பாடலாக வரக்கூடிய பாடல் தான் இந்த டிய்யாலோ டிய்யாலோ பாடல் .

இந்த பாடல் உணர்த்துவது மனித வாழ்வில் எவ்வளவு சிக்கல்கள் வந்தாலும் அதை தாண்டி சென்றால் மட்டுமே நம்மால் அடுத்த வெற்றியை நோக்கி செல்ல முடியும் அதையே யோசித்து கொண்டு இருந்தால் வாழ்வு வீணாகி விடும் என்பதாகும் . என்ன பிரச்சனை வந்தாலும் டிய்யாலோ டிய்யாலோனு போய்டே இரு என்பதையே கூறியிருப்பார்கள் .

 Deeyalo deeyalo kayal tamil movie

தன் காதலியை பார்க்க தவிக்கும் காதலனுக்கு அவனின் நண்பன் கூறும் ஆறுதல் போல பாடல் அமைந்திருக்கும் .பிரபு சாலமன் மற்றும் டி.இம்மான் கூட்டணியில் இது வழக்கமாகும் அதே போல மைனா படத்தில் ஜிங்ஜிக்கா பாடல் இடம்பெற்றிருக்கும் மேலும் கும்கி படத்தில் சொய்ங் சொய்ங் பாடல் இடம் பெற்றிருக்கும் அந்த வரிசையில் இந்த பாடலும் ரசிகர்களின் பிடித்தமான ஒரு பாடல் ஆகும்.

பிரபு சாலமன் மற்றும் டி .இம்மான் இருவரும் இந்த வகையிலான நம்பிக்கை மிகுந்த மற்றும் கடவுள் சார்ந்த பாடல்களை விரும்புபவர்கள் .பிரபு சாலமன் சரியான வெற்றிக்காக சினிமாவில் போராடி கொண்டிருக்கும் போது தான் டி.இம்மான் கூட்டணியில் மைனா படத்தை இயக்கினார் .அதில் இருந்தே தொடர் வெற்றிகளை சந்தித்து வந்தார் .

டி.இம்மானின் தெய்வ நம்பிக்கை சார்ந்த பாடல்களில் எப்போதும் உணர்வுள்ள இசை இருக்கும் என்று பலரும் கூறுவார்கள் அதையே பிரபு சாலமன் தன் படங்களில் வெளிகொண்டு வருகிறார் .பிரபு சாலமன் நம்பிக்கை மிகுந்த படங்களை எடுப்பவர் அதனாலயே அவர் எழுதும் கதைகளில் நம்பிக்கை மிகுந்த அசாத்தியமான காட்சிகள் இடம் பெறுகின்றன.

கயல் படத்திற்கு பின் இந்த கூட்டணியில் தொடர் வெற்றி படம் வெளியாகியது , கலவையான விமர்சனங்களினால் படம் தோல்வியுற்றது .இதனால் இந்த கூட்டணி பிளவு பெற்றது என்றே கூறலாம் , பிரபு சாலமன் இயக்கும் கும்கி 2 படத்தில் டி.இம்மான் இல்லை என்பது வருத்தத்திற்கூரிய விசயமாக இருந்தாலும் பிரபு சாலமன் கூறியது போல் டிய்யாலோ டிய்யாலோ என்று போய் கொண்டே இருக்க வேண்டும் .அடுத்தடுத்த படங்களில் இந்த கூட்டணி நம்மை மகிழ்விக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X