பாலியல் புகார் விவகாரம்.. பம்மிய பாயல் கோஷ்.. பகிரங்க மன்னிப்பு கேட்டார்.. தள்ளுபடியானது வழக்கு!

மும்பை: பிரபல பாலிவுட் இயக்குநர் மீது பாலியல் புகார் தொடுத்த நடிகை பாயல் கோஷ், போற போக்கில் நடிகை ரிச்சா சதா பெயரை இழுத்து விட அவர் தொடுத்த மான நஷ்ட வழக்கில் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்துள்ள நடிகை பாயல் கோஷ், இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கொடுத்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பினார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு, போதைப் பொருள் புழக்கம், கங்கனா ரனாவத் சர்ச்சை என அல்லோகலப்பட்டுக் கொண்டு இருக்கும் பாலிவுட்டில் மேலும் ஒரு புதிய அணுகுண்டாக இந்த விவகாரம் வெடித்தது.

அத்துமீறி பலாத்காரம்

அத்துமீறி பலாத்காரம்

நயன்தாரா, விஜய்சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், தன்னை பலவந்தப்படுத்தினார் என்றும், சோபாவில் தள்ளி விட்டு பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்தார் என பரபரப்பு குற்றச்சாட்டை நடிகை பாயல் கோஷ் முன் வைத்தார்.

ஜனாதிபதிக்கு கடிதம்

ஜனாதிபதிக்கு கடிதம்

இது தொடர்பாக மும்பை போலீசில் புகார் அளித்த நடிகை பாயல் கோஷ், மகாராஷ்ட்ரா கவர்னர் பகத் சிங்கையும் நேரில் சந்தித்து தனது பிரச்சனை குறித்து முறையிட்டார். ஆனால், இதுவரை இயக்குநர் அனுராக் காஷ்யப் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றும் அவர் கைது செய்யப்படவில்லை என்றும் கூறி ஜனாதிபதிக்கே கடிதம் எழுதி உள்ளார் பாயல் கோஷ்.

போலீஸ் விசாரணை

போலீஸ் விசாரணை

மகாராஷ்ட்ரா கவர்னரை சந்தித்து நடிகை பாயல் கோஷ் முறையிட்டதைத் தொடர்ந்து மும்பை போலீசார் அனுராக் காஷ்யப்புக்கு சம்மன் அனுப்பினர். அதன் பேரில், மும்பை போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகி, தனது தரப்பு வாதத்தை இயக்குநர் அனுராக் காஷ்யப் முன் வைத்தார். அதற்கு பிறகு, அந்த வழக்கு தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போகிற போக்கில்

போகிற போக்கில்

தனக்கு துணை தேடும் ரீதியாக, அனுராக் காஷ்யாப், இன்னும் சில நடிகைகளுடனும் தொடர்பில் இருந்தார் என்றும் போட்டுடைத்தார் பாயல் கோஷ். நடிகைகள் ரிச்சா சதா, மஹி கில், நடிகை ஹூமா குரேஸி உள்பட சில நடிகைகளின் பெயர்களையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த நடிகைகள், தங்கள் மீதான புகாரை மறுத்திருந்தனர். அதோடு, அனுராக் தங்களிடம் தவறாக நடக்கவில்லை என்றும் கூறி பாயல் மூக்கை உடைத்து விட்டனர்.

மான நஷ்ட வழக்கு

மான நஷ்ட வழக்கு

தனது பெயரை தவறாக பயன்படுத்திய பாயல் கோஷை சும்மா விடப் போவதில்லை என்ற முடிவோடு களமிறங்கிய நடிகை ரிச்சா சதா, பாயல் கோஷ் மீது மான நஷ்ட வழக்கை தொடர்ந்தார். மேலும், பாயல் கோஷ் மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய டிவி சேனல் சுமார் 1.1 கோடி கொடுக்க வேண்டும் என வழக்குப் போட்டார்.

பகிரங்க மன்னிப்பு

பகிரங்க மன்னிப்பு

பிரச்சனை கை மீறி போனதை எண்ணி பம்மிய பாயல் கோஷ், பகிரங்கமாக நடிகை ரிச்சா சதாவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்றத்திலும், நடிகை பாயல் கோஷின் வழக்கறிஞர், மன்னிப்பு கடிதத்தை சமர்பித்த நிலையில், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. மேனன் இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X