வெற்றி சிரித்து மகிழ வைக்கும்;தோல்வி சிந்தித்து ஜெயிக்க வைக்கும் - சீமான்

By Shankar

சென்னை: வெற்றி மகிழ வைக்கும், தோல்வியோ சிந்தித்து ஜெயிக்க வைக்கும் என்றார் இயக்குநர் சீமான்.

நேற்று நடந்த பார்க்கணும் போல இருக்கு பட விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசுகையில், "பெரிய நிறுவனங்களுக்கு இல்லாத துணிச்சல் இந்த எப். சி.எஸ் கிரியேஷன்ஸ் துவார் சந்திரசேகருக்கு இருக்கிறது. முதலில் அவரைப் பாராட்டுகிறேன்.

தோல்வியும் நல்லதுதான்...

தோல்வியும் நல்லதுதான்...

இவர் எடுத்த முந்தைய படங்கள் வெற்றி பெறவில்லை என்றார்கள். தோல்வி சொன்னதாம் 'என்னைச் சந்தித்து விட்டுப் போன எவரும் தோற்றதில்லை' என்று. வெற்றி சிரித்து மகிழ வைக்கும்;தோல்வி சிந்தித்து ஜெயிக்க வைக்கும்.

மண்ணின் மைந்தர்கள்

மண்ணின் மைந்தர்கள்

இந்த தயாரிப்பாளருக்கு வெற்றி நிச்சயம் வரும் அவர் எங்கள் சிவகங்கைச் சீமைக் காரர் என்பதில் மகிழ்ச்சி. அவர் மட்டுமல்ல ஏவிஎம் மெய்யப்ப செட்டியார் அவர்கள், மகத்தான கலைஞன் கமல் எல்லாரும் எம் மண்ணின்மைந்தர்கள்தான். இங்கே உள்ள அபிராமி ராமநாதன் ஐயா, கஞ்சாகருப்பு, இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார், ஏகாதசி எல்லாருமே என் மண்ணின் மைந்தர்கள்தான்.

நன்றியுள்ள கஞ்சா

நன்றியுள்ள கஞ்சா

கஞ்சாகருப்பு நன்றியுள்ளவன். அவன் உழைத்து அவன் வியர்வையில் சம்பாதித்த பணத்தில் வீடுகட்டினான். அதற்கு அவனை அறிமுகம் செய்தவர்கள் பெயரில் பாலா, அமீர் இல்லம் என்று பெயர் வைத்துள்ளான்.

கோடிக்கணக்கில் கேட்காதப்பா

கோடிக்கணக்கில் கேட்காதப்பா

இந்த இசையமைப்பாளர் அருள்தேவ் வித்யாசாகரிடம் உதவியாளராக இருந்த போது எனக்குத் தெரியும். அவர் இப்படி ஒரு இசையமைப்பாளராக வருவார்என்று நான் நினைக்க வில்லை. இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது தாரா பாரதியின் வரிகள் 'இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் ஆகும் என்று யாருக்குத் தெரியும்.?' பாடல்கள் நன்றாக உள்ளன. இவர் வளர்ந்த போது கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கக் கூடாது.

இதே பாதையில்

இதே பாதையில்

தயாரிப்பாளர் கல்ல கதை திரைக்கதையுள்ள படங்களை எடுக்க வேண்டும். எந்தக் காலத்திலும் நட்சத்திர நடிகர்கள் இவருக்குத் தேவையில்லை. இதே பாதையில் பயணிக்கவும், "என்று கூறி வாழ்த்தினார்

நடிகை நமீதா பேசும் போது, "பாடல்கள் பார்த்தேன்.. நன்றாக இருந்தன. நடித்தவர்கள் நன்றாக நடித்துள்ளார்கள். தயாரிப்பாளர் பல புதியவர்களை அறிமுகப் படுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். நீங்களும் ஆசி தாருங்கள்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X