பொன்னியின் செல்வனில் இணைந்த தெய்வத்திருமகள் குட்டி பாப்பா!

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வம்.

கடந்த சில மாதங்களாக ஹைதராபாத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

விக்ரமுடன் இணைந்து தெய்வத் திருமகள் படத்தில் நடித்து அனைவரையும் ரசிக்க வைத்த குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன் இப்பொழுது பொன்னியின் செல்வனில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நாவலை தழுவி

நாவலை தழுவி

தொடர்ந்து காதல் படங்களை இயக்கி வந்த இயக்குனர் மணிரத்னம் இப்பொழுது சரித்திர திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். தமிழில் மிகவும் புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி,திரிஷா, ஐஸ்வர்யாராய்,சரத்குமார் பிரபு, பார்த்திபன் உள்ளிட்ட பலர் இதில் நடித்து வருகின்றனர்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் பொன்னியன் செல்வன் படப்பிடிப்பு கடந்த சில மாதமாக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து நடத்தப்பட்டு வந்தது. அப்பொழுது சரத்குமார், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது கொரோனா பரவல் காரணமாக படிப்பு நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடங்கப்பட்டது.

விக்ரமின் மகளாக

விக்ரமின் மகளாக

கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கும் பொன்னியன் செல்வன் படத்தில் இப்பொழுது தெய்வத்திருமகள் புகழ் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜுன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விக்ரமின் மகளாக தெய்வத்திருமகள் படத்தில் நடித்து அனைவரது உங்களையும் வென்ற சாரா அர்ஜுன் அதன்பிறகு நித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லுக் கருப்பட்டி போன்ற படங்களில் நடித்தார்.

முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் சாரா பல படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக இருக்க பொழுது இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் பொன்னியின் செல்வனில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X