twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேஜாவு movie review..விறுவிறு..பரபர..வலுவான கிரைம் கதை..அசத்திய அருள்நிதி

    |

    அருள் நிதி நடித்து ஓடிடியில் வெளிவந்துள்ள தேஜாவு கதை முழுவதும் கிரைம் கதை. காட்சிக்கு காட்சி விறுவிறுப்பும், அதற்கேற்ற அருள்நிதியின் நடிப்பும் சிறப்பாக உள்ளது.

    அருள்நிதி படங்களை தேர்வு செய்து நடிப்பவர் என்கிற பெயருண்டு. அதேபோல் கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பையும் கொடுத்துள்ளார்.

    போலீஸ் அதிகாரியாக மிரட்டல் நடிப்புடன் அவர் துப்பறியும் காட்சி காட்சிக்கு காட்சி விறுவிறுப்பாக உள்ளது.

    கொல மாஸ்...சாம்பிளே இப்படியா?...சிம்பு பட ஆடியோ விழாவிற்காக வேற லெவலில் போடப்பட்டுள்ள செட் கொல மாஸ்...சாம்பிளே இப்படியா?...சிம்பு பட ஆடியோ விழாவிற்காக வேற லெவலில் போடப்பட்டுள்ள செட்

    அருள்நிதியின் தனித்துவம்

    அருள்நிதியின் தனித்துவம்

    நடிகர் அருள்நிதி உள்ளிட்ட சில இளம் நடிகர்களுக்கு எப்போதும் ஒரு சிறப்பு உண்டு. அவர்கள் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடிப்பார்கள். அதில் அருள்நிதி தனி ரகம். பாத்திரங்களை தேர்வு செய்வதிலும், அந்த பாத்திரமாகவே மாறிப்போவதும் அவருக்கே உரிய இயல்பு. யதார்த்தமான நடிப்பு, ஆபாச பேச்சு, சிகரெட் பிடிக்கும் காட்சிகள், அதிக வன்முறை இல்லாமல் அருள்நிதி படமா நம்பி பார்க்கலாம் என்று ஒரு குறிப்பிட்ட ரசிகர் கூட்டம் அருள்நிதிக்கு உண்டு என வெளியில் பேச்சு உண்டு. தேஜாவு படத்திலும் அதை சிறப்பாக கையாண்டுள்ளார். போலீஸ் அதிகாரி என்றவுடன் சிகரெட்டாக ஊதித்தள்ளாமல் இயல்பாக நடித்துள்ளார்.

    படத்தின் கதை இதுதான்

    படத்தின் கதை இதுதான்

    முதல் காட்சியில் ஒரு எழுத்தாளர் தனக்கு மிரட்டல் போன் கால்கள் வருவதாக போலீஸ் ஸ்டேஷன் புகார் அளிக்க அவரது புகாரை அலட்சியம் செய்து அனுப்பி வைக்கின்றனர். அவர் தனது வீட்டில் அமர்ந்து கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அதேநேரம் ஒரு பெண்ணை 4 பேர் கடத்துகின்றனர் அவர்களிடமிருந்து தப்பித்த அந்த பெண் கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து தெரிவிக்க அவரது போன் காலை ட்ரேஸ் செய்த அதிகாரிகள் எழுத்தாளருக்கும் அந்த பெண் போன் செய்தது அறிந்து அவரது வீட்டுக்கு வந்து விசாரணைக்கு அழைத்து செல்ல முயற்சிக்கின்றனர் அப்போது ஏற்படும் தள்ளுமுள்ளுவில் மீடியாக்கள் பக்கம் இந்த விவகாரம் செல்கிறது.

    சீக்ரெட் ஆபரேஷனுக்காக வரும் அருள்நிதி

    சீக்ரெட் ஆபரேஷனுக்காக வரும் அருள்நிதி

    காணாமல் போன இளம் பெண் டிஜிபியின் மகள் என்பது பின்னர் தெரிய வருவதால் விவகாரம் சூடு பிடிக்கிறது. டிஜிபியாக ரோஜா படத்தின் கதாநாயகி மதுமிதா நடித்துள்ளார். காணாமல் போனது தனது மகள் என்று அறிந்தவுடன் அவரிடம் பதற்றம் தொற்றிக்கொள்ளும் வேகவேகமாக மகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் அவர் செயல்படுவது அவருக்கு எதிராக முடிகிறது பிரச்சினை மீடியாக்கள் மத்தியில் பரவ டிஜிபியை அழைத்து கண்டிக்கிறார் முதல்வர். இதனால் தான் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் டிஜிபி தனக்காக வெளிமாநிலத்தில் இருந்து ஒரு அதிகாரியை சீக்ரெட் ஆபரேஷனுக்காக கூப்பிடுகிறார். சிறப்பு அதிகாரியாக அருள்நிதி என்ட்ரி கொடுக்கிறார்.

    அடுத்தடுத்த காட்சிகளில் வேகம்

    அடுத்தடுத்த காட்சிகளில் வேகம்

    இவையெல்லாவற்றையும் எழுத்தாளர் தன் கதையில் நடப்பதாக எழுதுகிறார். அவரது எழுதுவது ஒவ்வொன்றும் அப்படியே நடப்பதால் போலீஸ் அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது. அவருடைய அறையில் ஒரு போலீசாரை போட்டு கண்காணிக்க சொல்கின்றனர். சிறப்பு அதிகாரியாக வரும் அருள்நிதி வந்தவுடன் படத்தில் வேகம் கூடி விடுகிறது. ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணை மூன்று பேர் கடலில் தூக்கிப் போட்டதாக எழுத்தாளர் எழுத பதைபதைப்புடன் கடலுக்கு சென்று பார்த்தபோது அங்கு வேறு ஒரு பெண் பிணம் கிடக்கிறது இதனால் டிஜிபி மனம் அமைதி அடைகிறது. பின்னர் அருள்நிதி ஒவ்வொரு கட்டமாக முன்னேறி குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி எடுக்கிறார்.

    ட்விஸ்ட் சிறப்பு

    ட்விஸ்ட் சிறப்பு

    இதன்பின் குற்றவாளிகளை போலீஸ் அதிகாரி அருள்நிதி பிடித்தாரா டிஜிபியின் மகள் மீட்கப்பட்டாரா? என்பதுதான் படத்தின் பின்பாதி கதை. இதில் கடைசி காட்சியில் பெரிய அளவில் ட்விஸ்ட் வைத்துள்ளார் இயக்குனர். இது யாருமே எதிர்பாராத ட்விஸ்ட் என்பதால் படத்தின் கடைசி காட்சி வரை விறுவிறுப்பு உள்ளது.

    கதையின் பிளஸ்

    கதையின் பிளஸ்

    கதையின் பிளஸ் என்று பார்த்தால் முதலில் நிற்பது அருள்நிதியின் மிரட்டலான நடிப்பு. ஐபிஎஸ் அதிகாரியாக வரும் அவர் தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளார். போலீஸ் துறையில் என்னென்ன நடைமுறைகள் உள்ளன என்பதை விசாரணைகள் எப்படி நடக்கும் என்பதை பிசிறு தட்டாமல் கொண்டு சென்றுள்ளது கதையின் பிளஸ் எனலாம். படத்தில் திரைக்கதை காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் படம் பார்ப்பவர்களுக்கு குழப்பமில்லாமல் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. இதற்கு எடிட்டரை பாராட்டியே ஆக வேண்டும். .

    படத்தின் மைனஸ்

    படத்தின் மைனஸ்

    படத்தின் மைனஸ் என்று சொன்னால் போலீஸ் காட்சிகளை சிறப்பாக எடுத்த இயக்குனர் பல இடங்களில் லேசாக கோட்டை விடுகிறார். டிஜிபி மகள் காணாமல் போனால் டிஜிபியே ஸ்பாட்டுக்கு வந்து விசாரணையில் ஈடுபடுவாரா? சிட்டி கமிஷனர் மற்ற உயர் அதிகாரிகள் காட்சியிலேயே இல்லை. டிஜிபி தனக்காக ஒரு அதிகாரியை போட்டு இயக்கினாலும் கமிஷனர் உள்ளிட்ட போலீஸார் எதுவும் செய்யாமல் சும்மா இருந்துவிடுவார்களா? பல இடங்களில் இதுபோன்ற சிறுசிறு காட்சிகள் உள்ளன இது போலி என்கவுண்டர் செய்யும் கமிஷனராக வரும் மதுமிதா தானே நேரடியாக 4 பேரை சுட்டுக்கொல்வது அபத்தமாக உள்ளது.

    நோயாளியை போலீஸ் அதிகாரி பேச்சைக்கேட்டு மருத்துவர் கொல்வாரா?

    நோயாளியை போலீஸ் அதிகாரி பேச்சைக்கேட்டு மருத்துவர் கொல்வாரா?

    நடைமுறையில் இல்லாத. புகார்தாரரை குற்றவாளி ஆக்குவதும், என்கவுண்டரில் கொலை செய்வதையும் ஏற்றுக்கொண்டால்கூட பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பெண்ணை கமிஷனர் வேண்டுமானால் கொலை செய்ய முயற்சிக்கலாம் மருத்துவர் ஒப்புக்கொள்வது நடக்கிற காரியமா? அவரை கைது செய்யும் காட்சியும் படத்தில் இல்லை. என்று தெரியவில்லை. பல இடங்களில் போன் கால்களை டிரேஸ் செய்யாமல் போலீசார் சுற்றி கொண்டிருப்பதும் வலுவான கதை அமைத்த இயக்குனர் சின்ன சின்ன இடங்களில் கோட்டை விடுவதை காட்டுகிறது.

    கொலையான பெண் யார், ஒட்டுமொத்த டிபார்ட்மெண்டையே தனி ஒருவர் ஏமாற்ற முடியுமா?

    கொலையான பெண் யார், ஒட்டுமொத்த டிபார்ட்மெண்டையே தனி ஒருவர் ஏமாற்ற முடியுமா?

    அருள்நிதி விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது மூன்று பேர் கடலில் தூக்கிப் போட்ட பெண்ணின் உடலை கைப்பற்றுவதும் அந்த மூன்று பேர் யார் அந்தப் பெண்ணின் யார் அந்த பெண் அந்த கொலையை செய்தது யார் என்பது பற்றி எந்தவித விளக்கமும் படத்தில் இல்லை. அந்தக்கொலையை யார் செய்தது, எழுத்தாளர் எழுதினால் கடைசிக்காட்சியில் அவர் மூலம் விளக்கம் சொல்லப்படவில்லை. அருள்நிதி தானாக போலீஸ் அதிகாரியாக உள்ளே நுழைகிறார், ஒட்டுமொத்த போலீஸ் ஆபரேஷனில் செயல்படும் பொழுது அது போலி என்பது எளிதாக மற்றவருக்கு தெரியும் அவர் சிக்கிக் கொள்ளாமல் எப்படி தப்பிக்கிறார் என்பது பற்றியும் கதையில் இல்லை.

    சமீபகால கிரைம் படங்களில் சிறப்பான படம்

    சமீபகால கிரைம் படங்களில் சிறப்பான படம்

    ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் சமீப காலமாக வந்துள்ள கிரைம் அடிப்படை திரைப்படங்கள் லாஜிக் இல்லாமல் கூடை கூடையாக பூவை காதில் சுற்றுவதும் போலீஸ் நடைமுறைகள் தெரியாமல் கண்டபடி எடுப்பதும் போன்ற காட்சிகள் கொண்டதாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் அவை எதுவும் பெரிய அளவில் இல்லாமல் சின்ன சின்ன சறுக்கல்கள் மட்டுமே உள்ளன. மொத்தத்தில் படம் அட்டகாசமாக நகர்கிறது. கதையில் ஒரு இடத்தில் கூட குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாதவண்ணம் காட்சிகள் நகர்கிறது. கடைசி அரைமணி நேரம் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தாலும் கடைசி ட்விஸ்ட் யாரும் எதிர்பாராத அளவுக்கு மாறுபட்டதாக உள்ளது பாராட்டத்தக்கது.

    English summary
    Arul Nithi starrer Dejavu movie released in OTD. The whole story is a crime story. Scene after scene is lively and Arul Nidhi's acting is excellent.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X