ஸ்ரீதேவி உடல் மும்பை வருவதில் தாமதம்! பொதுவழக்கு நீதிபதி ஒப்புதல் வேண்டும்
Recommended Video

மும்பை : துபாயில் இறந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதற்கு முன் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் பொது வழக்கு நீதிபதியிடம் ஒப்புதல் பெறும்வரை உடலை ஒப்படைக்க முடியாது என்றும் கூறியுள்ளனராம்.
நடிகை ஸ்ரீதேவி துபாயில் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். தடயவியல் அறிக்கையின்படி, அவர் குளியலறையில் தவறி விழுந்து குளியல் தொட்டியில் மூழ்கியதால் இறந்ததாகவும் அப்போது அவர் மது உட்கொண்டிருந்ததற்கான ஆதாரங்கள் ரத்த மாதிரிகளில் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

துபாய் அரசு ஸ்ரீதேவி மரணத்துக்கு இறப்புச் சான்றிதழ் அளித்துள்ளது. அதில் உள்ள விவரங்களை அனைத்தும் அரபி மொழியில் உள்ளன. அந்த அறிக்கை தூதரகத்தில் அனுமதி பெற்று ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படுமாம்.
ஸ்ரீதேவியின் உடலை மும்பை கொண்டு வருவதற்கு முன் துபாய் அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முடிக்க இன்று இரவு 9 மணி ஆகும் எனக் கூறப்படுகிறது. அதன்பிறகு துபாயிலிருந்து கிளம்பி நள்ளிரவில் உடல் மும்பைக்கு கொண்டுவரப்படும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
நாளை காலை 11 மணி வரை ஸ்ரீதேவியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின் பவன்ஹன்ஸ் பகுதியில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதற்கு முன் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அதுவரை உடலை ஒப்படைக்க முடியாது என்று துபாய் அரசு வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
துபாய் போலீஸ் இந்த வழக்கை பொது வழக்காக மாற்றியுள்ளது என்றும் பொது நீதிபதியின் ஒப்புதல் பெற்றால் தான் உடலை ஒப்படைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. வழக்கமாக இது போன்ற வழக்குகளில் பின்பற்றப்படும் நடைமுறையே இதிலும் பின்பற்றப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











