இந்த காட்சியை '96' படத்தில் பார்த்திருக்க மாட்டீர்கள்: முடிஞ்சா ஃபீல் பண்ணாம பாருங்க
Recommended Video

சென்னை: 96 படத்தில் இருந்து நீக்கப்பட்ட மேலும் ஒரு காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 96 படம் சூப்பர் ஹிட்டானது. காரணம் படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் ராம், ஜானு இடத்தில் தங்களை வைத்து பார்த்து பழைய நினைவுகளை அசை போட்டது தான்.

96 படத்தை பார்த்துவிட்டு முன்னாள் காதலியின் செல்போன் நம்பரை தேடிக் கண்டுபிடித்து ஏங்கியவர்கள் பலர். இப்படி பலரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்திய 96 படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை வெளியிட்டனர். அந்த காட்சியில் பாடகி ஜானகி வந்தார்.
இந்நிலையில் மேலும் ஒரு நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டுள்ளனர். அந்த காட்சியில் ராம், ஜானு, சுபா மட்டும் உள்ளனர். யாரும் பேசாமல் ரசிகர்களை அதை பற்றி பேச வைத்துவிட்டனர்.
விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு த்ரிஷாவுக்கு 96 படம் மூலம் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றே கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications











