காசு கொடுத்தால் போலீஸ் என்ன செய்யும்?: வீடியோ வெளியிட்ட அடங்கமறு குழு
சென்னை: அடங்கமறு படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.
புதுமுகம் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி, ராஷி கன்னா, சுரேஷ் மேனன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான அடங்கமறு படம் ஹிட்டாகியுள்ளது.
இந்நிலையில் அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை வெளியிட்டுள்ளனர்.
பணம்
காவல் நிலையத்தில் ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இது காசு கொடுத்து கவனிக்கச் சொன்னவை, இது காசு கொடுத்து கண்டுக்காமல் இருக்கச் சொன்னவை. குவிந்து கிடக்கும் ஆவணங்கள் காவல் துறையை நம்பி பொதுமக்கள் கொடுத்த புகார்கள் என்று முனிஷ்காந்த் ஜெயம்ரவியிடம் கூறும் காட்சி வெளியாகியுள்ளது.
நீக்கம்
இந்த காட்சியை ஏன் நீக்கினார்கள். முனிஷ்காந்த் பேசியது பொதுமக்கள் அனைவருக்கும் தெரியாத ரகசியம் ஒன்றும் இல்லையே. நல்ல காட்சியை நீக்கிவிட்டார்களே என்று விமர்சனம் எழுந்துள்ளது.

பிரச்சனை
இந்த காட்சியை படத்தில் வைத்திருந்தால் எதிர்ப்பு கிளம்பியிருக்கும் என்று நினைத்திருப்பார்களோ?. அய்யோ ரவி, தற்போது எல்லாம் எதிர்ப்பு தான் இலவச விளம்பரம். இப்படி அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறீர்களே.
வீடியோக்கள்
இது போன்ற அட்டகாசமான காட்சிகளுடன் மேலும் சில வீடியோக்கள் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏமாற்றிவிடாதீர்கள் ரவி.


Click it and Unblock the Notifications











