உடன்பிறப்பே படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியீடு... ரசிகர்கள் கூடுதல் குஷி
சென்னை : ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதத்தில் வெளியானது உடன்பிறப்பே படம்.
ஜோதிகாவின் 50வது படமான இது சூர்யா தயாரிப்பில் உருவாகி அமேசான் ப்ரைமில் வெளியானது.
இந்தப் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை தற்போது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உடன்பிறப்பே படம்
நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் உடன்பிறப்பே. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு உருவான இந்தப் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஜோதிகா. இது அவரது 50வது படம்.

அமேசான் ப்ரைமில் வெளியீடு
அண்ணனுக்கும் கணவனுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் நம்முடைய பெண்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படம் வெளியானது. படம் அமேசான ப்ரைமில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. இரா சரவணன் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது.

அண்ணன் -தங்கை சென்டிமெண்ட்
பாசமலர் துவங்கி தற்போது வரை அண்ணன் -தங்கை சென்டிமெண்ட்டை வைத்து அதிகமான படங்கள் கோலிவுட்டில் வந்தாலும் எப்போதும் வரவேற்பை பெறும் சென்டிமெண்ட் இது. அந்த வகையில் உடன்பிறப்பே படமும் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது.

உணர்வுப்பூர்வமான கதைக்களம்
சிறப்பான இந்தக் கதைக்களத்தை எடுத்துக் கொண்டு உணர்வுப்பூர்வமாக அதை காட்சிப் படுத்தியதில் வெற்றி பெற்றுள்ளார் இரா சரவணன். ஜோதிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஆழமான கேரக்டர் அமைந்துள்ளது சிறப்பு.

தஞ்சாவூர் பெண்ணாக மாறிய ஜோ
கருத்து வேறுப்பாட்டால் பிரிந்துள்ள தனது கணவன் மற்றும் அண்ணன் மீண்டும் இணைய மாட்டார்களா என்ற ஏக்கத்தை அவர் வெளிப்படுத்தும் விதம் படம் நெடுகிலும் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தில் தஞ்சாவூர் பெண்ணாகவே மாறியிருக்கிறார் ஜோதிகா.

சிறப்பான சூரி கேரக்டர்
படத்தில் சூரியின் கேரக்டரும் சிறப்பான கதையோட்டத்திற்கு உதவியுள்ளது. இமான் இசையில் அண்ணே யாரண்ணே பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. பின்னணியிலும் அந்தப் பாடலை இழையோட வைத்துள்ளது சிறப்பு. மொத்தத்தில் இந்தப் படம் நவீன பாசமலராக இருந்தது.

நீக்கப்பட்ட காட்சிகள்
இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம தற்போது வெளியிட்டுள்ளது. அதில் சடங்கிற்காக அமர்த்தப்படும் பெண் குழந்தைகள் பற்றி ஜோதிகா பேசுவது உள்ளிட்ட காட்சிகள் காணப்படுவது சிறப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











